எப்பவுமே ஒரு கப்பல் கேப்டின் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது நடிகர் மாதவனின் 14 கோடி படகு !


நடிகர் மாதவன் 14 கோடியில், சொகுசுப் படகு ஒன்றை வாங்கியுள்ளார். டுபாயில் இந்தப் படகு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இங்கே தான் புத்தாண்டு தினத்தை மாதவன் கொண்டாடி இருக்கிறார். இவர்களோடு நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் இணைந்து படகில் குதுகலமாக புத்தாண்டை கழித்துள்ளார்கள். எப்பவுமே ஒரு கப்பலை செலுத்தும் கேப்டின் ஆக வேண்டும் என்பது, எனது நீண்ட நாள் கனவு என்று மாதவன் தெரிவித்துள்ளார்.

இதற்காக தான் இந்த படகை நான் வாங்கி இருந்தேன். கொரோனா கால கட்டத்தில் பரீட்ச்சை ஒன்றி எழுதி தேர்வாகி இருந்தேன். ஆனால் கப்பல் தான் இல்லை. தற்போது இந்த சிறிய கப்பலை வாங்கி விட்டேன், அதற்கான கேப்டன் லைசன்ஸும் எனக்கு கிடைத்து விட்டது. 40 அடி நீளமான சிறிய படகு அல்லது கப்பலை நான் இனி ஓட்ட முடியும் என்று, மாதவன் மேலும் தெரிவித்துள்ளார். 

புதியது பழையவை

தொடர்பு படிவம்