டுபாயில் நேற்று முன் தினம்(07) நடந்த கார் ரேசில், அஜித் ஓடிய கார் திடீரென விபத்திற்கு உள்ளானது. இதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அஜித்தின் மனேஜர் தெரிவித்துள்ளார். இருப்பினும் சில சிறிய காயங்கள் உள்ளதாக கூறப்பட்டாலும். டுபாய் மருத்துவ மனையில் அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. உள் காயங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதற்காக தான் என்கிறார்கள்.
டுபாயில் நடக்கும் போட்டியில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் , என்று அஜித்திற்கு மிகுந்த நம்பிக்கை இருந்துள்ளது. இதனால் அவர் சிறுத்தை சிவா தொடக்கம் தனது நண்பர்கள் பலரை டுபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் இந்தச் சம்பவம் பலரை, அச்சமடைய வைத்துள்ளது. இந்த வயதில் இது போன்ற ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது போக,
தமிழகத்தில் உள்ள அனைத்து TV சேனல்களும், இந்த விபத்தை மாறி மாறி ஸ்லோ மோஷனில் காட்டியே மக்களை மேலும் பயமுறுத்தியுள்ளார்கள் என்று தான் கூறவேண்டும். என்ன தான் இருந்தாலும் அஜித் மிகவும் மனத் தைரியம் கொண்டவர்.