அதே லக்கி பாஸ்கர் பாணியில் 1.73 கோடியை ஆட்டையை போட சாந்தி என்ற பெண் !

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் தலைமைக் கணக்காளராக பணிபுரிந்த பெண் ஒருவர் ரூ1.73 கோடி ரூபாயை கையாடல் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அந்த பெண்ணை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி, இறுதியில் கைதுசெய்துள்ளார்கள். 

நடந்தது என்ன ?

சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீராகவேந்திரா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜய்குமார். இவர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: எங்கள் நிறுவனத்தில் தலைமை கணக்காளராக பணிபுரிந்தவர் சாந்தி. இவர் இரு ஆண்டுகளில் ரூ 1.73 கோடியை கையாடல் செய்திருப்பது ஆடிட்டிங் மூலம் கண்டுபிடித்தோம். அதுவரை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

அதாவது துல்கர் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தை மிஞ்சும் அளவுக்கு இவருடைய மோசடி இருந்தது. 12 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த சாந்தி மீது விஜய்குமார் நம்பிக்கை வைத்திருந்தாராம். இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது, வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பது, பணத்தை கையாள்வது போன்ற பொறுப்புகளை அவரிடம் கொடுத்துள்ளார். வங்கியிலிருந்து வரும் OTPக்களை எல்லாம் தனது செல்போனுக்கு வரும் வகையில் சாந்தி மாற்றிக் கொண்டாராம்.

இந்த நிலையில் 600 ஊழியர்களின் வங்கிக் கணக்குடன் தூத்துக்குடியில் உள்ள 10 உறவினர்களின் வங்கிக் கணக்குகளையும் நைசாக நுழைத்தாராம். ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தும் போது , தனது உறவினர்களுக்கும் ஊதியம் செலுத்தப்பட்டதாம். இப்படி உறவினர்களையும் தொழிலாளர்கள் போல் காட்டி 2 ஆண்டுகளில் ரூ 1.73 கோடி பணத்தை சுருட்டியுள்ளார். பிறகு உறவினர்களிடம் இருந்து பணத்தை வாங்கி, தனது மகன், மகள் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளார். மொத்தமாக வரவு வைத்தால் சந்தேகம் எழும் என்பதால் சேர்ந்த பணத்தில் வீடு, நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.

அந்த வகையில் பெரம்பலூரில் இரு வீடுகளையும், அடையாறில் ஒன்றரை கோடியில் தனது தாயின் பெயரில் ஒரு வீடும் வாங்கியதாக தெரிகிறது. மேலும் தனது மகனையும் மகளையும் பிரபல தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க வைத்ததும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இவற்றை எல்லாம் எப்படி மீளப் பெறுவது என்பது பெரும் கேள்விக் குறி தான். ஆனால் சாந்தி செய்த லக்கி பாஸ்கர் விளையாட்டு பெரும் விளையாட்டாக உள்ளது !

புதியது பழையவை

தொடர்பு படிவம்