சீனாவில் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் HMPV வைரஸ் லண்டனுக்கும் தற்போது பரவி விட்டது


வட சீனாவில் தோன்றியுள்ள, கொரோனாவை ஒத்த திரிவு கொண்ட வைரஸால் அந்த நாட்டில் உள்ள வைத்தியசாலைகள் எல்லாம் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ள நிலையில். இந்த வைரஸ் லண்டனுக்கும் பரவி விட்டதாக, லண்டன் மருத்துவர்கள் சற்று முன்னர்(06 திங்கள் இரவு) தெரிவித்துள்ளார்கள். இந்த வைரஸ் பெரும்பாலும் சிறார்களையே தாக்குகிறது. இதனால் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டு, பல சிறார்கள் இறந்துள்ளார்கள். இதன் ஆரம்ப கட்ட அறிகுறியாக, கடும் தலைவலி தோன்றும்.

அதன் பின்னர் சட்டென கடும் காச்சல் உருவாகி, மூக்கு வழியாக சளி வரும். மேலும் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாவதால் உடனே மூச்சுத் திணறல் தோன்றும். இது அனைவரையும் தாக்கி வரும் நிலையில். சிறார்களை தாக்கும் போது அதன் வீரியம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் இருந்து லண்டன் வந்த விமானத்தில் இருந்த சிறு பிள்ளை ஒன்றுக்கே இந்த வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த விமானத்தில் வந்த அனைவரையும் பிரிட்டன் அரசு பரிசோதனை செய்து வருகிறது.

மேலும் சீனாவில் இருந்து லண்டன் வரும் விமானங்களை நிறுத்துவது தொடர்பாக பிரிட்டன் அரசு ஆராய்ந்து வருகிறது. இது எந்த அளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. இந்தக் குளிர் காலத்தில் , மேலும் கடுமையான இந்த HMPV வைரஸ் தாக்கம், பெரும் அவஸ்தைகளையே கொண்டு வர உள்ளது. 



புதியது பழையவை

தொடர்பு படிவம்