3 தமிழர்கள் ரஷ்ய படையில் இருப்பது இனம் காணப்பட்டுள்ளது- உயர் மட்ட பேச்சு வார்த்தை ஆரம்பம்

 ரஷ்ய படையில், வட கிழக்கில் உள்ள சில தமிழர்கள் இணைக்கப்பட்டுள்ளது தொடர்பாக விரைவில் உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற உள்ளதாக அனுராவின் அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில், 3 ஈழத் தமிழர்கள் இனம் காணப்பட்டுள்ள விடையம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் வெளிநாடு செல்ல கொழும்பு சென்று, தங்கி இருந்தவர்கள் என்று, மூவரது பெற்றோரும் தகவல் கூறி உள்ளார்கள். இவர்களை ஏஜன்சி ஏமாற்றி கொண்டு சென்றதா ?

இல்லை இலங்கை மீடியாக்கள் குறிப்பிடுவது போல, ரஷ்ய குழு ஒன்று ஆட்களை சேர்த்து ரஷ்யா அனுப்பி வைக்கிறதா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இது தொடர்பாக விரைவில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இன்று தெரிவித்துள்ளார்.  ரஷ்யப்படையில் வடக்கின் தமிழ் இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் , பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.

கொழும்பில் உள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு முன்னாலுள்ள, சுற்றுவட்டத்தில் ரஷ்யப்படையில் தமது உறவுகள் வலிந்து இணைக்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவித்து. நான்கு தாய்மார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நேற்று(06) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடையம் !



Post a Comment

Previous Post Next Post