உண்மைக்கு புறம்பான பல செய்திகளை போட்டு தமிழர்களை தெளிவாகக் குழப்புவதில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த ஈPC தமிழ். அவர்களது TRP ரேட் எகிறவேண்டும் என்பதற்காக, எல்லாச் செய்திகளையும் பரபரப்பாக்கி போடுவார்கள். தற்போது இவர்கள் சொல்லும் விடையம் என்னவென்றால், MP அர்ச்சுணாவை, சஜித் பழி வாங்குகிறாராம். ஏன் என்றால் சஜித் பிரேமதாசவுக்கும் MP அச்சுணாவுக்கும், 100 வருட முன் பகை இருக்கிறது பாருங்கள். "கேட்ப்பவன் கேணையன் என்றால் எலி ஏரோ பிளேன் ஓடியது என்பார்களாம்".
நாடுளுமன்றில் ஆழும் கட்சிக்கு 60 விகித நேர பேச்சுக்கு இடமுண்டு, எதிர் கட்சிக்கும் 40 விகித நேர பேச்சுக்கே இடம் உண்டு. இதனால் அர்ச்சுணா பேசுவதை எதிர் கட்சி நேரத்தில் ஒதுக்க வேண்டாம் என்று சஜித் தரப்பு கூறியுள்ளதாக ஈPC தமிழ் ஒரு புதுப் புரளியை கிளப்பி விட்டுள்ளது. இதனால் ஐயகோ ! தமிழ் MPக்கு நாடாளுமன்றில் இழைக்கப்படும் அநீதியை கேட்க்க யாருமே இல்லையா ? என்று கூப்பாடு போடுகிறது ஈPC தமிழ்.
நாடாளுமன்றம் கூடிய முதல் நாளே, இணையத்தில் ட்ரென்ட் ஆகவேண்டும் என்று, வேண்டும்-என்றே சென்று சஜித் ஆசனத்தில் அமர்ந்து அதனை வீடியோ எடுத்து வெளிவிட்டவர் அர்ச்சுணா. இது ஊர் அறிந்த உண்மை. பின்னர் சொறிச் சேட்டை விடப் போய் கைகலப்பில் முடிந்தது. உண்மையில் இலங்கை நாடாளுமன்றில், சுயேட்சையாக வென்று வரும், MPக்கள் பேச என நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சொல்லப் போனால்..
அதனை சபாநாயகரே வழி நடத்துகிறார். ஒரு விடையம் முக்கியம் என்றால், அது குறித்து பேச சபாநாயகர் மேலதிக நேரத்தை ஒதுக்குவது வழக்கம். ஆனால் இந்த விடையத்தை வைத்து சந்தில் சிந்து பாடுகிறது ஈPC தமிழ் இதில் இந்த வெருளி MP அர்ச்சுணா, இந்த ஆளை நினைத்தால் தான் மிகவும் கவலையாக இருக்கு. தமிழர் அரசியலில் இப்படி எல்லாம் நடக்க வேண்டி இருக்கு ? இது எல்லாம் தலை விதியா ?