ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மதகஜ-ராஜா’. சுமார் 12 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு வெளியாகவுள்ளது. இதற்காக நடைபெற்ற பிரஸ் மீட்டில், நடிகர் விஷால் கலந்துகொள்ள வந்தவேளை, 2 தடவை தடுமாறி விழும் அளவுக்குச் சென்றுள்ளார். இதேவேளை எங்கே செல்வது என்று தெரியாமல் தடுமாறியும் உள்ளார். ஆனால் நண்பர்களை கண்ட உடனே அவர்களை கட்டி அணைத்தும் உள்ளார். இதேவேளை, அவர் கை நடுக்கத்தோடு மைக்கில் பேசியதைப் பார்த்த மக்கள், மத்தியில் சிறிய சலசலப்பு ஏற்படவே.
உடனே நிலமையை சமாளித்த DD என்ற திவ்விய தர்ஷினி அவர்கள், விஷானுக்கு மலேரியா ஜுரம் அதனால் தான் அவர் அவதி உறுகிறார் என்று கூறி விடையத்தை பூசி மெழுகி விட்டார். ஆனால் அவருக்கு அன்றைய தினம் ஜுரம் இல்லை. அப்படி இருந்திருந்தால் அவர் ஏன் நிகழ்வுக்கு வந்திருக்க வேண்டும் ? ஜுரம் இருந்தால் அவர் தனது நண்பர்களை ஏன் கட்டி அணைத்திருக்க வேண்டும் ? அவர் அப்படிச் செய்ய மாட்டாரே ? என்று பல கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள்.
மேலும் சொல்லப் போனால் DD சொன்னது எல்லாமே உண்மைக்கு புறம்பான விடையம் என்று பலர், விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளார்கள். உண்மையில் நடிகர் விஷாலுக்கு ஏதோ ஒரு நோய் தாக்கம் உள்ளது என்பது தெளிவாகியுள்ளது. அதற்கான சரியான சிகிச்சையை எடுப்பதே நல்லது.
Tags:
Cinema News