Biggboss 8: பிக்பாஸ் கொடுக்கும் ஆஃபர், லட்சங்களை அள்ள போவது இவரா ? நேரம் வந்திருச்சு


 Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியமே பணப்பெட்டியை யார் எடுப்பார் என்பதுதான். ஒவ்வொரு சீசன் இறுதியிலும் இப்படி ஒரு ஆஃபரை பிக் பாஸ் கொடுப்பார். அதில் இந்த சீசனில் தற்போது வீட்டுக்குள் எட்டு பேர் இருக்கின்றனர். அதில் ரயான் நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைகிறார்.அவரை தவிர மற்ற அனைவரும் நாமினேஷனில் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் நிச்சயம் பணப்பெட்டியை எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஒருவேளை ரயான் கூட இந்த முடிவை எடுக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு தான். அந்த வகையில் பிக் பாஸ் இந்த முறை 15 லட்சம் வரை ஆஃபர் கொடுத்திருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.அதிலும் விஷால் தான் இந்த பணப்பெட்டியை எடுக்கப் போகிறார் என கூறப்படுகிறது. ஏற்கனவே இவருடைய பெயர் டேமேஜ் ஆகிய விட்டதோ என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது.

அதனால் வந்தவரை லாபம் என இந்த பெட்டியை அவர் எடுக்கலாம். அதே போல் விஜய் டிவியும் இவர்தான் எடுக்க வேண்டும் என ஏற்கனவே லாக் செய்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் இந்த சீசனில் விஷால் தான் பணப்பெட்டியை எடுக்க இருக்கிறார். அதை அடுத்து ஐந்து பேர் இறுதிப்போட்டிக்குள் நுழைய இருக்கின்றனர்.

இதில் ரயான் முத்து தீபக் ஜாக்லின் ஆகியோர் உறுதி செய்யப்பட்டு விட்டனர். மீதம் இருக்கும் பவித்ரா அருண் சௌந்தர்யா ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் சௌந்தர்யாவுக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிகிறது. எது எப்படியோ இந்த சீசன் டைட்டில் முத்துவுக்கு தான் என்பதை ஆடியன்ஸ் முடிவு செய்துவிட்டனர்.

Post a Comment

Previous Post Next Post