ஊழல், மோசடி, இலஞ்சம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் சுயாதீனமாக தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு மாத காலத்தில் அதன் பிரதிபலன்களை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதில் எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி , யார் மேல் எல்லாம் வழக்குகள் மற்றும் விசாரணைகள் நடைபெறுகிறதோ. அது தொடர்பான அனைத்து விடையங்களையும் மக்கள் முன் வைக்க நாம் தீர்மானித்து உள்ளோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இலஞ்சம்,ஊழல், மோசடிகள் மற்றும் நிதி முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. அதற்கான நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு மாத காலம் பொறுமையாக இருக்க முடியுமென்றால் அதன் பிரதிபலன்களை காண முடியும். நாம் ஒருபோதும் அதனை அரசியலாக்கவில்லை.
பொலிசாரின் செயற்பாடுகளை நாம் அரசியலிலிருந்து விடுவித்துள்ளோம் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு முழுமையான பொறுப்பை நாம் வழங்கியுள்ளோம். என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.