கார் ரேஸ் முடியும் வரை படங்களில் நடிக்க மாட்டேன்! நடிகர் அஜித்குமார் திட்டவட்டம்

 





ஷார்ஜா: கார் ரேஸ் முடியும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றுள்ள நிலையில் அவர் பேட்டி அளித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 18 வயதில் கார் ரேஸில் பங்கேற்பதை தொடங்கினேன். அதன் பின்னர் சினிமாவில் நடித்ததால் ரேஸில் பங்கேற்கவில்லை


நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை, அதாவது அக்டோபர் மாதம் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன். 2010 ஆம் ஆண்டு EUROPEAN 2 என்ற ரேஸில் கலந்து கொண்டேன். அதன் பிறகு என்னால் கார் ரேஸில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. தற்போது கார் ரேஸிங்கில் பங்கேற்பது மட்டுமல்லாமல் ரேஸின் உரிமையாளராகவும் உள்ளேன் என அஜித் குமார் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்போரில் அஜித்தும் ஒருவர். இவர் எத்தனை கோடி கொடுத்தாலும் அரசியல் சார்ந்த படங்களில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் நல்ல மனிதரும் கூட! எல்லாவற்றையும் விட கார் ரேஸர். தான் நடித்த படங்களிலும் கார் ரேஸிங்கை முன்னிறுத்தியிருப்பார். ரீல் லைஃபில் மட்டுமல்லாமல் ரியல் லைஃபிலும் அவர் கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு சாகசங்களை செய்து வருகிறார். இதனால் விபத்தில் சிக்கி அவருக்கு பல முறை முதுகுதண்டில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அது போல் கால் தண்டு வடத்திலும் சிறிய ஆபரேஷன்கள் நடத்தப்பட்டன.


2010 ஆம் ஆண்டு நடந்தச எஃப்ஐஏ பார்முலா 2 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் கலந்து கொண்டார். ஏற்கெனவே 2003, 2004 ஆகிய ஆண்டுகளில் சர்வதேச கார் ரேஸ்களிலும் அவர் கலந்து கொண்டார். அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக இருந்ததால் ரேஸிங்கில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து துபாயில் நடக்கும் 24 மணி நேர கார் ரேஸில் நடிகர் அஜித்தும் அவருடைய குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் தீவிர பயிற்சியை எடுத்தனர். இதற்காக பல கோடி மதிப்பிலான 24 எச் சீரிஸ் வகை காரை அஜித் வாங்கினார். 901 என்பது அஜித் குமார் இயக்கும் காரின் எண் ஆகும். சனிக்கிழமை 11 ஆம் தேதியான நாளை மதியம் 1 மணிக்கு ரேஸ் தொடங்கும். அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு முடிவடையும். 24 மணி நேரமும் இடைவிடாமல் டிரைவர் காரை இயக்குவார். இந்த ரேஸிங்கில் அஜித்துடன் 3 ரேஸர்கள் இருப்பார்கள்.


ஒருவர் கேப்டனாக இருப்பார், அவர்தான் பிரதான டிரைவர் 14 முதல் 18 மணி நேரம் வரை ஓட்ட வேண்டும். இந்த கார் ரேஸின் கேப்டன் அஜித்குமார்தான். எனவே இவர்தான் காரை ஓட்டுகிறார். இந்த 24 மணி நேரத்தில் எவ்வளவு லேப்பை கடக்கிறார்களோ அதன் அடிப்படையில் பாயிண்டுகள் வழங்கப்படும். இந்த ரேஸை நேரடியாக டிக்கெட் பெற்றும் கண்டு களிக்கலாம். இல்லாவிட்டால் யூடியூப்பிலும் பார்க்கலாம். அஜித் இந்த ரேஸிங்கில் வெல்ல வேண்டும் என அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.


புதியது பழையவை

தொடர்பு படிவம்