இன்றைய தினம்(10) வெள்ளியன்று, அமெரிக்க ஜனாதிபதியாகவுள்ள டொனால் ரம்புக்கு, நீதிபதி Juan Merchan தண்டனையை வழங்கியுள்ளார். டொனால் ரம் ஒரு குற்றவாளி என்றும். அவருக்கு சிறைத் தண்டனையை தாம் வழங்கவில்லை. மாறாக அவரை எந்த ஒரு நிபந்தனையும் இன்றி விடுவிக்கிறேன் என்று நீதிபதி Juan Merchan அறிவித்துள்ளார்.
அட அப்படி என்றால் டொனால் ரம் தப்பிவிட்டார் என்று நீங்கள் நினைக்கக் கூடும். அது தான் இல்லை. அவர் சிறைத் தண்டனையில் இருந்தே தப்பித்துள்ளார். ஆனால் அவர் ஒரு குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிறிய குற்றமோ இல்லை பெரிய குற்றமோ. குற்றவாளி என்று ஒரு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பை கொடுத்தால். அன் நபரால் வாழ்கையில் எந்த ஒரு துப்பாக்கியையும் கையில் எடுக்க முடியாது. மேலும் சில தடைகள் அவருக்கு உள்ளது.
டொனால் ரம்புக்கும் Stormy Danielsக்கும் இடையே அப்படி என்ன நடந்தது ? இந்த பாலியல் தொழில் புரியும் பெண்ணோடு, டொனால் ரம் நெருக்கமான உறவில் இருந்துள்ளார். அவர் அமெரிக்க ஜனாதிபதியாகிய பின்னர். இந்த விடையங்களை மீடியாவுக்கு விற்றால் பெரும் பணம் கிடைக்கும் என நினைத்தார் Stormy Daniels.
இதனை உடனடியாக தடுக்கவும், தனது குட்டுகள் வெளியே செல்லாமல் இருக்கவும் டொனால் ரம் பணத்தை கொடுத்துள்ளார். இது அவரது சொந்தப் பணமாக இருந்தாலும், கொடுத்த முறை தான் முறைகேடாக உள்ளது. இதுவே குற்றம் ஆகும். ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் இதனை ஒரு வழக்காக கூட கருத முடியாது. ஆனாலும் இது அரசியல் ஆக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. தற்போது கிடைத்துள்ள தண்டனையால், அமெரிக்க வரலாற்றிலேயே, குற்றம் ஒன்றை இழைத்து குற்றவாளி என்ற பெயருடன், ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்க்கப் போகும் முதல் ஜனாதிபதி டொனால் ரம் தான் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.