பாகிஸ்தானை அலறவிடும் ஆப்கானிஸ்தான்.. தாலிபான்கள் கொடுத்த புது வார்னிங்.. அடுத்த டார்கெட் இதுதான்

 


காபூல்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மோதல் வலுத்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கி வரும் தாலிபான் அமைப்பினர் அடுத்ததாக புதிய வார்னிங்கை கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டு நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த வார்னிங் பாகிஸ்தானுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லையை பகிர்ந்து வரும் சூழலில் தற்போது கடுமையாக மோதி வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் எல்லையில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இருதரப்பினர் துப்பாக்கி சண்டையும் போட்டு கொண்டனர். இன்னும் தொடர்ந்து மோதல் நடந்து வருவதால் இருநாட்டின் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. தற்போதைய சூழலில் பாகிஸ்தான் ராணுவத்தை விட டிடிபி அமைப்பினரின் கைகள் ஓங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. தாலிபான்களை பார்த்து பாகிஸ்தான் ராணுவத்தினரும் விலகி செல்வதாக கூறப்படுகிறது.

அதாவது பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி சில ராணுவ நிலைகளை டிடிபி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த டிடிபி அமைப்பின் பிரதான நோக்கம் என்பது ஆப்கானிஸ்தானை போல் பாகிஸ்தானிலும் தாலிபான்கள் ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது தான். இதற்கு முதலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்க்க வேண்டும். இதனை டார்க்கெட்டாக வைத்து தான் தற்போது டிடிபி அமைப்பு பாகிஸ்தானுடன் மோதலை தொடங்கி உள்ளது.

இந்த மோதல் என்பது பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது. இதனால் டிடிபி அமைப்பினரை ஒழித்து கட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை தொடர்ந்து தான் டிடிபி அமைப்பு கடும் கோபம் அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பு சார்பில் பாகிஸ்தானுக்கு புதிய மிரட்டல் என்பது விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பு சார்பில் இனி எல்லையில் மட்டும் ராணுவத்துடன் நாங்கள் மோதல் போக்கை நடத்த மாட்டோம். அதையும் தாண்டி பாகிஸ்தானில் உள்ள நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். குறிப்பாக பாகிஸ்தான் ராணுவம், அரசு சார்ந்த நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்.

ராவல்பிண்டியை மையப்படுத்தி செயல்படும் தேசிய லாஜிஸ்டிக்ஸ் செல் நிறுவனம், பவ்ஜி உர கம்பெனி, ராணுவம் சார்ந்த ஹவுசிங் அத்தாரிட்டி, வங்கிகள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல்நடத்தப்படும். இதனால் பொதுமக்கள் அரசு சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து 3 மாதத்தில் விலகி கொள்ள வேண்டும். அதேபோல் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் தங்களின் வருமானத்துக்கு மாற்று ஏற்பாட்டை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த மிரட்டல் பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் ராணுவத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் அதுசார்ந்த எந்த கருத்தையும் சொல்லவில்லை. டிடிபி அமைப்பு சார்பில் பாகிஸ்தானுக்கு சொந்தமான நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது என்பது இருநாடுகள் இடையே தற்போது இன்னும் பதற்றம் அதிகரித்துள்ளது.


புதியது பழையவை

தொடர்பு படிவம்