முதலில் ட்ரோன்.. இப்போது டேங்குகள்.. இந்தியாவை மிரட்டும் வங்கதேசம்.. துருக்கியால் வரும் புதிய தலைவலி

 




டாக்கா: எல்லையில் நம் நாட்டுடன் மோதலை வங்கதேசம் கடைப்பிடித்து வருகிறது. இதில் வங்கதேச வீரர்கள் விரட்டியடிக்கப்படும் சூழலில் இப்போது துருக்கி நாட்டிடம் இருந்து அதிநவீன டேங்குகளை வாங்க வங்கதேசம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே துருக்கி நாட்டு ட்ரோன் கொண்டு நம்மை மிரட்டும் வங்கதேசம் அடுத்ததாக அந்த நாட்டின் டேங்குகளை வைத்து மிரட்ட முடிவு செய்துள்ளது. இதனால் துருக்கியால் நம் நாட்டுக்கு பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.


வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து அந்த நாட்டில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. இதில் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஷ் உள்ளார். இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் அவர் நம் நாட்டை தேவையின்றி சீண்டி வருகிறார்.


வங்கதேசம் - இந்திய எல்லையில் துருக்கி நாட்டு ட்ரோன்களை பறக்கவிட்டு உளவு பார்க்கும் பணியில் வங்கதேசம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக நம் நாடும் எல்லையில் ட்ரோன்களை குவித்துள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக நம் நாட்டின் 5 கிலோமீட்டர் எல்லையை பிடித்துள்ளதாக வங்கதேச எல்லை பாதுகாப்பு படை கொக்கரித்தது. ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை என்று நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை பதிலடி கொடுத்தது.


அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இருநாட்டு எல்லையில் நம் நாட்டு வீரர்கள் வேலி அமைக்கும் பணிக்கும் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலுக்கு போனது. அப்போது எல்லையோர மக்கள் நம் நாட்டு எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு ஆதரவாக திரண்டதால் வங்கதேச படை வீரர்கள் பின்வாங்கினர்.இப்படி நம் நாட்டிடம் தொடர்ந்து மோதி பின்னடைவை வங்கதேசம் சந்தித்து வருகிறது.


இந்தியா நினைத்தால் வங்கதேசத்துடன் மோதி எளிதாக வீழ்த்தலாம். ஆனால் நம் நாடு அத்தகைய செயலை விரும்பவில்லை. அண்டை நாடு தானே, நாம் பார்த்து சுதந்தரம் பெற்று கொடுத்தவர்கள் தானே என்று அமைதியுடன் வங்கதேசத்தை அரவணைக்கவே நினைக்கிறது. ஆனால் வங்கதேசம் திருந்தவில்லை. இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது துருக்கி நாட்டிடம் இருந்து வங்கதேசம் டாங்கிகளை வாங்க முடிவு செய்துள்ளது. துருக்கி நாட்டின் துல்பர் லைட் டேங்குகளை (Tulpar Light Tanks) வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறது. இது நம் நாட்டு எல்லையில் நிறுத்தப்படலாம். தற்போது துருக்கி நாட்டிடம் இருந்து 26 துல்பர் லைட் டேங்குகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் இந்த முடிவுக்கு பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான நிலப்பகுதி என்பது ஆறாகவும், சதுப்பு நிலமாகவும், கரடுமுரடான நிலப்பரப்பாகவும் உள்ளது. இந்த நிலப்பகுதிகளில் துருக்கி நாட்டின் துல்பர் லைட் டேங்குகளால் எளிதாக பயணிக்க முடியும்.


இந்த டேங்குகளில் ன் அதிநவீன தொழில்நுட்பம், கரடுமுரடு, சதுப்பு நிலத்தில் பயணிக்கும் தன்மை உள்ளிட்டவற்றால் இது நம் நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமையும். இதுபற்றி நிபுணர்கள் கூறுகையில், ‛‛வங்கதேசம் தனது ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேவேளையில் துருக்கி நாட்டிடம் இருந்து டேங்குகளை வாங்குவதன் பின்னணியில் இன்னொரு காரணமும் உள்ளது. அதாவது வங்கதேசம் தனது பிராந்தியத்தில் இருந்தபடி இந்தியாவுடன் மோதி வரும் சூழலில் அதனை இன்னும் பதற்றமாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

 ஏற்கனவே துருக்கி நாடு நம்முடன் மோதலை கடைப்பிடிக்கும் பாகிஸ்தானுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த நாட்டின் ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் புதிய ஆலைகளை தொடங்கவும், ராணுவ உதவிகளை வழங்கவும் துருக்கி தயாராக உள்ளது. மறுபுறம் நம் நாட்டுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்வதை துருக்கி வாய்மொழியாக தடை செய்துள்ளது. இத்தகைய சூழலில் தான் வங்கதேசம், துருக்கியிடம் இருந்து டேங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு உதவி செய்து ஆசியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்த துருக்கி முயன்று வருகிறது’’ என்று கூறியுள்ளனர்.


புதியது பழையவை

தொடர்பு படிவம்