டில்லி விமான நிலையத்துக்கு முதலை மண்டை ஓட்டுடன் சென்ற பயணி கைது

 





இந்தியாவில் முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு சென்ற வெளிநாட்டு பயணி டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,


தாய்லாந்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை டில்லிக்கு விமானம் சென்றுள்ளது. அந்த விமானத்தில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.


பயணிகள் டில்லி விமான நிலையம் சென்றடைந்த நிலையில் அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணியின் பையில் இருந்து 777 கிராம் எடைகொண்ட முதலை மண்டை ஓடு கைப்பற்றப்பட்டுள்ளது.


இதையடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு வந்த கனடா நாட்டு பயணியை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலை மண்டை ஓட்டை தாய்லாந்தில் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post