மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது. கணவன், மனைவி, அவர்களது 3 பெண் குழந்தைகள் என 5 பேரும் இறந்த நிலையில் படுக்கைக்கு கீழ் இருக்கும் ஸ்டோரேஜ் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டிருந்தனர்.
ரூர்கியில் புசானா கிராமத்தைச் சேர்ந்தவர் மொயின் (52). இவருக்கு ஹப்பூரை சேர்ந்த அஸ்மா (45) என்பவருடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களளுக்கு அக்ஷா (8), அசைசா (3), அலிஸ்பா (1) ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். கிராமத்தில் உள்ள நிலத்தை விற்ற காசை கொண்டு கடந்த ஓராண்டுக்கு முன்பு மொயின் ஒரு காலி மனையை வாங்கினார். தற்போது அங்கு ஒன்றரை மாதங்களாக வீடு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இவர்கள் மீரட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். இவர்களது வீட்டிற்கு மொயினின் அண்ணி வந்தாராம். அவர் கதவை தட்டிய போது கதவு தாழிடப்பட்டிருந்ததாம். மொயினுக்கும் அஸ்மாவுக்கும் போன் போட்டும் எடுக்கவில்லையாம். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வீட்டின் மேற்கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே இறங்கினர். அப்போது வீடு முழுக்க தேடியும் கிடைக்கவில்லை.
அவர்களது படுக்கை அறையில் கட்டிலானது நகர்ந்து கிடந்தது. மேலும் அங்கிருந்து வாடையும் வந்தது. இதையடுத்து கட்டிலுக்கு அடியில் இருக்கும் சேமிப்பு அறையை திறந்து பார்த்த போது போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அதில் மொயின் உள்பட 5 பேரும் பெட்ஷீட்டால் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கிடந்தனர். போலீஸார் 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மொயின்- அஸ்மாவின் 70 உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் மொயினுக்கு வேறு ஒரு இடத்திலும் காலி மனை இருக்கிறது. அந்த இடத்தால் அவருக்கு உறவினர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை சந்தேகத்தின் பேரில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில் மொயினுக்கு வேறு ஒரு இடத்திலும் காலி மனை இருக்கிறது. அந்த இடத்தால் அவருக்கு உறவினர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை சந்தேகத்தின் பேரில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் ஒருவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரை போலீஸார் தேடி வருகிறார்கள். அந்த வீட்டில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அதை வைத்து குற்றவாளியை விரைந்து கண்டுபிடிப்போம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். ஒரு குடும்பத்தையே கருவறுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.