ரஷ்யாவுக்கு உள்ளே கோஷ் என்னும் பெரிய நகரத்தை கைப்பற்றியுள்ள உக்ரைன் படைகள், அங்கே தொடர்ந்து தமது நிலையை பலப்படுத்தி வருகிறார்கள். இதுவரை 3 தடவைகள் ரஷ்ய படைகள் கோஷ் நகரை மீட்க்க, போர் தொடுத்துள்ளது. இதில் பெரும் இழப்புகளை சந்தித்த ரஷ்ய படை பின் வாங்கியுள்ளது. இந்தப் போர் உலகையே உலுப்பியுள்ளது. ஏன் எனில் ஒரே நாளில் 1830 ரஷ்ய ராணுவத்தினர் இங்கே கொல்லப்பட்டதோடு. பெரும் இழப்புகளை சந்தித்து ரஷ்ய படை தலை தெறிக்க ஓடியுள்ளது !
மூன்று தடவையும் ரஷ்ய படைகளால் கோஷ் நகரை கைப்பற்ற முடியவில்லை. அங்கே 90 சதவிகிதமான ரஷ்ய மக்கள் வெளியேறியுள்ள நிலையில். மீதம் உள்ள மக்கள் உக்ரைன் படைகளோடு, வளைந்து கொடுத்து காலத்தை ஓட்டி வருகிறார்கள். உக்ரைன் படைகளும், தங்களுக்கு அமெரிக்க மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் கொடுக்கும் உணவுகளை மற்றும் உடைகளை ரஷ்ய மக்களுக்கு கொடுத்து. அவர்களை வளைத்துப் போட்டு வைத்துள்ளார்கள். இன் நிலை நீடித்தால் ரஷ்யாவுக்கு உள்ளே உக்ரைன் படைகள், ஒரு சுயாதீன மாகாணம் ஒன்றை உருவாக்கி விடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
பிரித்தானியா கொடுத்துள்ள கவச வாகனங்களில் பல இந்த நகரை தான் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது. இங்கே ஒரு பலமான தளத்தை உக்ரைன் அமைத்துள்ளது. இதனை ரஷ்யாவால் உடைக்க முடியவில்லை என்பது, நம்பவே முடியாத காரியம். ரஷ்யா தனது படைகளை இங்கே கொண்டு வந்தால். அது வேறுமாதிரியான விளைவுகளை தோற்றுவிக்கும். இதனால் ரஷ்யா இந்த நகரை கைப்பறுவதை, தற்காலிகமாக கைவிட்டுள்ளது.