தல அஜித் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் தான் Good-Bad-Ugly, .இது ஏப்பிரல் 10ம் திகதி திரையரங்கிற்கு வரும் என்று படக் குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதேவேளை தனுஷ் நடித்துள்ள "இட்லி கடை" திரைப்படமும் ஏப்பிரல் 10 வெளியாகவுள்ள நிலையில். 2 படங்களும் மோத உள்ளது. ஆனால் விடா முயற்ச்சி போல, அஜித்தின் Good-Bad-Ugly படத்திற்கும் ஏதாவது சிக்கல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் Good-Bad-Ugly என்ற ஆங்கில திரப்படம் ஒன்று ஏற்கனவே வெளியாகி உள்ளது.
இதில் கிளீன் டிஸ் வுட் நடித்துள்ளார். 1966ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸ் ஆகி சக்கைப் போடு பொட்டது. வசூலையும் அள்ளிக் குவித்தது. அதே சாயலில் தான் இந்த Good-Bad-Ugly அஜித் படமும் இருக்கும் என்று சில நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே மகிழ் திருமேனி எடுத்த , விடாமுயற்ச்சிக்கு அமெரிக்க நிறுவனமான பாரமவுண்ட் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, உரிமம் கோரியுள்ளது. இதில் இந்தப் படம் வேறு ?