சட்டென்று வெளியேறிய ஆளுனர்: ஸ்டாலின் RN ரவி இடையே தொடரும் பனிப் போர் முடிவுக்கு வருமா ?


நேற்று முன் தினம்(06) தமிழக சட்ட மன்றத்தில் இருந்து திடீரென, தமிழக ஆளுனர் ரவி அவர்கள் வெளியேறி இருந்தார். இப்படி நடப்பது இது முதல் தடவை அல்ல. அவர் சிறப்பு உரை ஆற்ற வரும்வேளை, இந்திய தேசிய கீதத்தையும் போடுமாறு கேட்டு இருந்தார். ஆனால் தமிழ் தாய் வாழ்த்து மட்டுமே போடப்பட்டது. இந்திய தேசிய கீதத்தை போடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆளுனர் உரை நிகழ்த்தாமல் சட்டென வெளியே சென்று காரில் ஏறி ஆளுனர் மாளிகைக்கு சென்றுவிட்டார்.

இப்படி கடந்த ஆண்டிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடையம். ஆளுனராக ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல், அவரோடு பனிப் போர் ஒன்றை ஆரம்பித்துள்ளார் ஸ்டாலின். ஆனால் ரவியும் சற்றும் சளைத்தவர் அல்ல. பல விடையங்களில் அவரும் தமிழக அரசுக்கு பதிலாக, தனது மூக்கை நுளைத்துக் கொண்டு தான் இருக்கிறார். இதனால் தி.மு.காவினர் கடும் ஆத்திரமடைந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்