அனுராவுக்கு சிங்கள ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை: தளபதிகளை வீட்டுக்கு அனுப்பி வருகிறார் !

சமீபத்தில் தளபதி சர்வேந்திர சில்வாவின், சேவை நீடிப்பு விண்ணப்பத்தை அனுரா நிராகரித்துள்ளார். இதனால் சர்வேந்திர சில்வா, ஓயுவு பெற்று வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை தோன்றியுள்ளது. இதே போலத் தான் பல மூத்த தளபதிகளின் சேவை நீடிப்பு விண்ணப்பங்களை, அனுராவின் அரசு ஏற்க்கவில்லை என்று வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் சர்வேந்திர சில்வா. இவர் வேறு யாரும் அல்ல தமிழர்களுக்கு எதிராக யுத்தக் குற்றம் புரிந்தவர், என்பதனை தமிழர்கள் மறந்துவிடவில்லை.

இது போல 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளை, இலங்கை ராணுவம் வென்றவேளை. அந்த நேரத்தில் தளபதிகளாக இருந்த சிலரை கோட்டபாய மற்றும் மகிந்த ஆகியோர் வெளிநாட்டு தூதுவர்களாக நியமித்து,  அவர்களை கெளரப்படுத்தினார்கள். ஆனால் தற்போது அந்த வெளிநாட்டுத் தூதுவர்களை எல்லாம், அனுரா அரசு திரும்பப் பெற்று, புது தூதுவர்களை நியமித்து வருகிறது. அனுராவுக்கு சிங்கள ராணுவத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்று சர்வேந்திர சில்வா கூறியுள்ள விடையம், இலங்கையில் பரவலாக ஒரு பேசு பொருளாக அமைந்துள்ளது.

சிங்கள மக்கள் மத்தியில் அனுராவின் செல்வாக்கை சரிக்கவே, சர்வேந்திர சில்வா இவ்வாறு பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதேவேளை தமிழர்களுக்கு எதிராக பல போர் குற்றங்கள் புரிந்த ராணுவத் தளபதிள் சிலர் சேவை நீடிப்பு நிராகரிக்கப்பட்டு. வீட்டுக்குச் செல்ல உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.  அனுராவின் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இலங்கை ராணுவத்திற்கு அவர் எந்த சலுகைகளையும் செய்யவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாக உள்ளது. 

புதியது பழையவை

தொடர்பு படிவம்