அனுராவின் அரசோடு பேசி, இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விடுத்து. சில தமிழ் அரசியல்வாதிகள் இந்தியா எமக்கு உதவி செய்யும் என்றும், அமெரிக்கா உதவி செய்யும் என்றும், மேலும் சிலர் சுவிஸ் அல்லது நோர்வே உதவி செய்யும் என்றும் அவர்கள் காலைப் பிடித்த வண்ணம் உள்ளார்கள். அந்த வகையில் தற்போது இலங்கையில் தமிழரசுக் கட்சி தனது 8 MPக்களோடு சென்று அமெரிக்க தூதுவர், யூலி சங் அவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்கள்.
இதில் ஸ்ரீ வாத்தி இனப் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைக்க, அமெரிக்கா உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு இருக்கின்ற தலையிடி, பொருளாதாரப் பிரச்சனை, இதனை எல்லாம் விடுத்து எங்கே தெற்காசியாவில் உள்ள இலங்கை அதுவும் வட கிழக்கு மக்களின் பிரச்சனையை தீர்க்கவா நேரம் இருக்கப் போகிறது ? இன்னுமாடா புரியவில்லை ? ரம் ஆட்சிக்கு வந்த உடனே பனாமா கால்வாயை எப்படி வளைத்துப் போடுவது ? டென்மார் உரிமை கோரும் கிரீன் லாந்து என்ற தேசத்தை எப்படி கைப்பற்றுவது என்று யோசிக்கவே அவருக்கு 4 வருடம் தேவை.
இதில் தெற்காசியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் பற்றி இந்த நாடுகள் ஏன் சிந்திக்க வேண்டும் ? இதனால் அவர்களுக்கு என்ன பயன் ? என்ன லாபம் இருக்கிறது ? மீண்டும் மீண்டும் அதே பிழைகளை விடுகிறார்கள் எங்கள் தமிழ் MPக்கள். நல்ல பெரும்பாண்மையோடு ஆட்சியில் உள்ள அனுராவுடன் பேசி, வட கிழக்கு இணைந்த ஒரு சுயாட்சி மாநிலமாக்க வக்கில்லையா ? தற்போது உள்ள பூகோள அரசியலில், இலங்கை தமிழர்களுக்கு எதிராக திரும்புமேயானால், அது இலங்கைக்கு பெரும் அவகீர்த்தியை ஏற்படுத்தும். எனவே இந்த சரியான தருணத்தை தமிழ் MPக்கள் ஏன் பாவிக்க அச்சத்தில் உள்ளார்கள் என்பது தெரியவில்லை !