வட சீனாவில் கடுமையாக பரவி வரும் இந்த புது விதமான வைரசால், வைத்தியசாலைகள் மட்டும் நிரம்பவில்லை. இறுதிக் கிரிகைகள் நடக்கும் இடங்கள், சவக்காலைகள், மற்றும் மருந்தங்கள் என்று எல்லா இடங்களிலும் மக்கள் நிரம்பி வழிகிறார்கள் என்று சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சவக்காலைகளில் பிணங்களை புதைப்பதிலும் பெரும் கூட்டம் உள்ளதாகவும், இதேவேளை இறுதிக் கிரிகைகளை நடத்தும் நிறுவனங்களிலும் மக்கள் , அதிகம் காணப்படுவதாகவும் அந்த ஊடகம் மேலும் செய்திகளை வெளியிட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க, அவுஸ்திரேலியாவில் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில். அவருடன் கூட வந்த நபர்கள், மற்றும் விமானத்தில் இருந்த நபர்களை , பொலிசார் தேடி வருகிறார்கள். இந்தியாவில் இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், லண்டன், ககாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொற்று உள்ள மனிதர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இந்த வைரஸ் , கொரோனா போல, பெரும் பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தும் என்று பலர் கருதுகிறார்கள்.