உக்ரைன் ரஷ்யாவின் எம்-ஐ 28 ரக தாக்குதல் ஹெலி ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த வீடியோவையும் உக்ரைன் ராணுவம் ஆதாரமாக வெளியிட்டுள்ளது. குறித அதி நவீன ஹெலியின் விலை சுமார் 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் இருந்த 2 விமானிகளும் அதே இடத்தில் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறு இருக்க, ரஷ்யாவுக்கு சொந்தமான நிலப் பரப்பான கோஷ் பகுதியில் இன்னும் உக்ரைன் ராணுவம் நிலை கொண்டுள்ளது. அவர்கள் மேலும் ஊடுருவி ரஷ்யாவின் பகுதிக்குள் சென்றுகொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இடம் முழுக்க முழுக்க ரஷ்ய நிலப்பரப்பு ஆகும். ஆனால் அந்த இடத்தை மீட்க்க புட்டின் இதுவரை தனது படைகளை அனுப்பவில்லை. இதனால் உக்ரைன் ராணுவம் மேலும் முன்னேறி வருகிறது. இதன் காரணத்தால் ரஷ்யாவின் பெரும் நிலப்பரப்பு ஒன்றை உக்ரைன் கைப்பற்றியுள்ளது.
Tags:
recent