வல்லரசு நாடுகள், பல அதி நவீன விமானங்களை தயாரித்து வைத்திருக்கிறது. ஆனால் அது சமயத்தில் கைகொடுக்காது. காரணம் அதில் உள்ள சாப்ஃட்வேர் தான். அது எந்த அளவு வேகமாக இயங்குகிறது என்பதனைப் பொறுத்தே, ஒரு விமானத்தின் திறன் கணக்கிடப்படுகிறது. மிகவும் இலகுவாகச் சொல்லப் போனால், உங்கள் மோபைல் போனை எடுத்துக் கொண்டால், அது சூடேறி இயங்கும் திறன் குறைந்தால் எப்படி இருக்கும். உங்களா ஒன்றும் செய்ய முடியாது அல்லவா ?
அதுபோல விமானம் வானில் பறக்கும் வேளை, அது எதிரி நாட்டு விமானத்தை தாக்குவது. எங்கே இருந்து ஏவுகணை வருகிறது. எங்கே எதிரி விமானங்கள் இருக்கிறது ? என்பது போன்ற தகவலி மில்லி செக்கனில் விமானத்தில் உள்ள கணணிகள் கண்டறிய வேண்டும். இல்லை என்றால் அடுத்த சில செக்கன்களில், விமானம் தாக்குதலுக்கு ஆளாகும். இதற்கு பாவிக்கப்படும் சாப்ஃட்வேர்(மென்பொருள்) அமெரிக்காவிடம் உள்ளது.
ஆனால் தற்போது அமெரிக்காவிடம் உள்ள அந்த சாப்ஃட்வேரை விட, 15 மடங்கு வேகமாக இயக்கும் சாப்ஃட்வேர் தம்மிடம் உள்ளது என்று சீனா உறுதிசெய்துள்ளதோடு. அதனை ஒப்பிட்டும் காட்டியுள்ளது. இதனால் அமெரிக்கா குழப்பம் அடைந்துள்ளது. சீனா ஒன்றும் பொய்யான தகவலை வெளியிட வில்லை என்பது உலகம் அறிந்த உண்மை. காரணம் அவர்கள் ஒன்றைக் கண்டு பிடிக்காமல், அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.
Tags:
world news