அழுதபடி விஜயை கட்டிப் பிடித்த அம்மா: வெற்றி நிச்சயம் என வாழ்த்து !


 மலேசிய விமான நிலையத்தில் இருந்து விஜய் அவர்கள் வெளியே வந்தபோது, அங்கே ஏராளமான தமிழர்கள் குவிந்திருந்தார்கள். இந்தக் கூட்டத்தில் இருந்த தாய் ஒருவர், "விஜய் தம்பி வருவாரு... விஜய் தம்பி வருவாரு..." என்று மிகுந்த ஆசையோடு அழைத்துக்கொண்டிருந்தார்.

இதனைச் செவிமடுத்த விஜய், தனது பாதுகாப்புப் பிரிவினரை நிற்கச் சொல்லிவிட்டு, அந்தத் தாயிடம் தனியாகச் சென்று பேசினார்; பின்னர் அவரோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதைப் பார்த்த அந்தத் தாய் நெகிழ்ச்சியில் அழுதுவிட்டார். பின்னர், "வெற்றி உங்களுக்குத்தான், நிச்சயம் வெல்லுவீர்கள்" என்று விஜயை மனதார வாழ்த்தினார். விஜய் அந்தத் தாயைக் கட்டியணைத்த காட்சிகள், காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன.

இப்படியொரு இளகிய மனம் கொண்ட மனிதன், ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? ஏன் மக்களுக்காகக் கஷ்டப்பட வேண்டும்? ஏன் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நினைக்க வேண்டும்? எதற்காக இவ்வளவு சவால்களை அனுபவிக்க வேண்டும்? தமிழக மக்களுக்குக் கொஞ்சமாவது நன்றியுணர்வு இருந்தால், விஜயை அடுத்த முதல்வராக்கியே தீரவேண்டும் என்கிறார்கள் மலேசியாவில் வாழும் தமிழர்கள். செய்வீர்களா?

Post a Comment

Previous Post Next Post