நள்ளிரவில் அதிரடி வீடியோ! திமுக போலீஸ் என்னை தூக்கப்போகுது! கதறும் சவுக்கு சங்கர்!


தமிழக அரசியலையே உலுக்கி வரும் ‘சர்ச்சை நாயகன்’ சவுக்கு சங்கர், நள்ளிரவில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. "என்னை எப்போது வேண்டுமானாலும் திமுக காவல்துறை கைது செய்யலாம்" என்று அவர் பீதியுடன் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான அதிரடி பாணியில் இல்லாமல், ஒருவித அச்சத்துடன் அவர் பேசியிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பெண் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்த சர்ச்சைப் பேச்சால் குண்டர் சட்டத்தில் சிக்கி, நீதிமன்றப் போராட்டங்களுக்குப் பின் வெளியே வந்த சவுக்கு சங்கருக்கு, தற்போது புதிய கண்டம் உருவாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆனந்தனை இழிவுபடுத்திப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை கோட்டூர்புரம் போலீசார் அவர் மீது எஸ்சி/எஸ்டி (SC/ST) சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான வழக்கை பதிவு செய்துள்ளனர். இதுவே அவரது தற்போதைய அலறலுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக கஞ்சா வழக்கு, தயாரிப்பாளர் மிரட்டல் வழக்கு என வரிசையாகப் புகார்களைச் சந்தித்து வந்த சங்கர், ஒவ்வொரு முறையும் சிறை செல்வதும் ஜாமீனில் வருவதுமாக இருந்தார். ஆனால், இப்போது பாய்ந்துள்ள எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவு அவருக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. தன் மீதும் தனது உதவியாளர் மாலதி மற்றும் குழுவினர் மீதும் போலீசார் எந்த நேரத்திலும் கைது நடவடிக்கையைத் துரிதப்படுத்தலாம் என்பதால், தப்பிக்க வழியின்றி அவர் வீடியோ மூலம் அபயக்குரல் எழுப்பியுள்ளார்.

ஆளுங்கட்சிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் சவுக்கு சங்கரை முடக்க, காவல்துறை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கக் காத்திருப்பதாக அவரே கூறியிருப்பது தமிழக அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது. நள்ளிரவு நேரத்து இந்தத் திடீர் வீடியோ பதிவு, தமிழக போலீசாரின் அடுத்தக்கட்ட அதிரடி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மீண்டு வருவாரா அல்லது மீண்டும் கம்பி எண்ணுவாரா சவுக்கு சங்கர்?

Post a Comment

Previous Post Next Post