ஜன நாயகன் படத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அடுத்த ஒரு மணி நேரம் !

ஜன நாயகனுக்கு மேலும் சிக்கல்... நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். இனி எப்போது தீர்ப்பை சொல்லுவார்கள் என்பதனை அவர்கள் அறிவிக்கவில்லை. அத்தோடு வாதப் பிரதிவாதங்கள் சரியான நேரத்தில் முடிவடையவில்லை என்ற ஒரு சாக்குபோக்கு சொல்லி, தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்கள். 

இன்னும் 2 வார காலம் தேவை என்று தணிக்கை குழு, தற்போது கோரியுள்ளது. அப்படி என்றால் ஜன நாயகன் அடுத்த மாதம் வரை வெளியாக வாய்ப்பில்லை. இன்னும் சிறிது நேரத்தில் நீதிபதி தனது தீர்ப்பை வெளியிட உள்ளார். இந்த தீர்ப்பு, விஜய்க்கு ஆதரவாக வந்தால் கூட, மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல தணிக்கை குழு முடிவு செய்துள்ளது. எனவே சென்னை உயர் நீதிமன்ற இன்றைய தீர்ப்பை எதிர்த்து தணிக்கை குழு டெல்லி உச்ச நீதிமன்றம் வரை சென்றால், மார்ச் மாதம் வரை இந்த வழக்கு இழுபட வாய்ப்புகள் உள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை 10:30 மணி முதல் ஜன நாயகன் பட விவகாரம் 'ஜவ்வு மிட்டாய்' போல நீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தற்போது மதிய உணவு இடைவேளைக்காக விசாரணையை ஒத்திவைத்துள்ளார். இடைவேளைக்கு பிறகு நீதிமன்றம் மீண்டும் கூடும்போது, படத்தின் வெளியீடு குறித்த இறுதி முடிவை நீதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தின் ஒவ்வொரு நாள் தாமதமும், தயாரிப்பாளர்களுக்கு பெரும் வட்டிச் சுமையை ஏற்படுத்தி வருகிறது. தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் இவ்வளவு பெரிய முதலீடு செய்யப்பட்ட படத்தை முடக்கி வைத்திருப்பது, தற்போது தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 5 பேர் கொண்ட தணிக்கைக் குழுவில் 4 பேர் படத்திற்கு சம்மதம் தெரிவித்தும், ஒருவரின் எதிர்ப்பால் படம் முடக்கப்பட்டுள்ளதை படக்குழுவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கடுமையாகச் சுட்டிக்காட்டினார்.

தணிக்கைக் குழுவின் வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகள் மற்றும் தெளிவற்ற சட்ட விதிகள் குறித்து ஆதாரங்களுடன் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தற்போது வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், திரையுலகமே நீதிபதியின் தீர்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. ஜன நாயகன் தடையின்றி வெளியாகுமா அல்லது சட்டப் போராட்டங்கள் தொடருமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

Post a Comment

Previous Post Next Post