லண்டனில் நாளை சனிக்கிழமை(03) மாபெரும் போராட்டம் ஒன்று நடக்கவுள்ளது. எந்த ஒரு அமைப்பும் சாராமல், அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரணம் தமிழர் என்ற உணர்வு மட்டும் இருந்தால் போதும், வந்து கலந்து கொள்ளுங்கள் என்ற அழைப்பு தான் இது. திருகோணமலையில் தமிழர் கன்னத்தில் ஒரு புத்த பிக்கு அறைந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை
அது போக தையிட்டியில் சட்ட விரோதமாக விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இப்படி தமிழர் தாயகத்தில் விகாரைகளை அமைத்து, தமிழர்களையும் பெளத்தர்கள் ஆக்க சிங்கள அரசு முனெடுத்து வரும் நிகழ்ச்சி நிரலை வெளிச்சத்திற்கு கொண்டுவர, லண்டனில் தமிழர்கள் ஆர்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளார்கள். அனைத்து உணர்வு மிக்க தமிழர்களுக்கும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Tags
London Tamil News

