ஈரான் நாட்டின் மினாப் (Minab) நகரில் உள்ள 'ஷஜரே தய்யிபா' (Shajareh Tayyebeh) சிறுமிகள் ஆரம்பப் பள்ளி மீது கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று நடத்தப்பட்ட கொடூரமான ஏவுகணைத் தாக்குதலுக்கு அமெரிக்கக் கடற்படையின் 'யுஎஸ்எஸ் ஸ்ப்ருவான்ஸ்' (USS Spruance) போர்க்கப்பலே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க ராணுவம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், பழைய உளவுத் தகவல்களை (Outdated Intelligence) பயன்படுத்தியதே இந்தத் தவறுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் ஏவுகணைகள் துல்லியமற்றவை என்றும், ஈரானே இந்தப் பள்ளியைத் தாக்கியிருக்கலாம் என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார். ஆனால், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏவுகணைப் பாகங்களில் 'Made in USA' மற்றும் ரேதியோன் (Raytheon) போன்ற அமெரிக்க நிறுவனங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதை ஈரான் ஆதாரமாக முன்வைத்துள்ளது. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, இது ஒரு 'திட்டமிடப்பட்ட போர் குற்றம்' என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மினாப் பள்ளித் தாக்குதலானது 2026-ஆம் ஆண்டுப் போரின் மிக மோசமான பொதுஜனப் பாதிப்பாகக் கருதப்படுகிறது. இந்தப் பள்ளியின் அருகிலேயே ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைத் தளம் இருந்ததே இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியாகச் சொல்லப்படுகிறது.
