குறிப்பாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள பல முக்கிய நகரங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடந்த சில நாட்களிலேயே, "எந்தத் தடயமும் இல்லை" எனக் கூறி வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. லிபரல் டெமக்ராட்ஸ் (Liberal Democrats) கட்சி வெளியிட்டுள்ள இந்தத் தரவுகளின்படி, எல்ம்ப்ரிட்ஜ் (Elmbridge) போன்ற சில பகுதிகளில் இந்தத் தோல்வி விகிதம் 92 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
இந்தப் பாதிப்புகளைப் பொதுமக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு பிரத்யேக 'இன்டராக்டிவ் மேப்' (Interactive Map) வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், உங்கள் வசிப்பிடம் எந்தப் போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதையும், அங்கு நடக்கும் திருட்டு வழக்குகளில் போலீஸார் எத்தனை சதவீத வெற்றியைப் பெற்றுள்ளனர் என்பதையும் துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம். சில பகுதிகளில் வெறும் 4 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர் என்பது இந்த மேப் மூலம் தெரியவந்துள்ளது.
போலீஸ் படைப்பிரிவில் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடி காரணமாகவே இத்தகைய சிறு குற்றங்கள் (Petty crimes) மீது போதிய கவனம் செலுத்த முடியவில்லை என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், "ஒவ்வொரு திருட்டுச் சம்பவத்திற்கும் போலீஸார் நேரில் வந்து விசாரணை நடத்த வேண்டும்" என்ற புதிய உத்தரவாதத்தை அரசு அமல்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மார்ச் 30-ஆம் தேதியான இன்று, இந்த விவகாரம் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
