6 -MAY யார் முதல்வர் என்பது தெளிவாகும்: 23 ஏப்பிரல் தேர்தல்- 11 நாட்கள் கழித்தே வாக்குகள் எண்ணப்படும்

 

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை 11 நாட்கள் கழித்து, அதாவது மே 4-ஆம் தேதி தொடங்கி, மே 6-ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என்று அறியப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் வெளியாக ஏன் இவ்வளவு நீண்ட இடைவெளி என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் சூழலில், மற்ற மாநிலத் தேர்தல்களைப் பாதிக்கக் கூடாது என்ற வழக்கமான காரணத்தையே தேர்தல் ஆணையம் முன்வைக்கப் போகிறது என்பது ஊர் அறிந்த விஷயம்.

மே 5-ஆம் தேதி இரவிலிருந்தே தேர்தல் முடிவுகள் கட்டம் கட்டமாகத் தெரிய வரும் நிலையில், விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஏப்ரல் 23-க்குப் பின்னரே வெளியாகும் என்பது தற்போது தெளிவாகிவிட்டது. சுமார் 55 நாட்களுக்கு முன்னரே தயாரிப்பு நிறுவனம் ஏப்ரல் மாத வெளியீட்டை உறுதி செய்திருந்தது. இதன் மூலம், ஏப்ரல் 23-க்குப் பின்னரே படத்தை வெளியிட முடியும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பது புரிகிறது. இல்லையென்றால், ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாக வேண்டிய படத்தை ஏப்ரல் வரை தள்ளிப்போட வேண்டிய அவசியம் என்ன?

மத்திய அரசுக்கு விஜய் மீது இருக்கும் ஒருவித அச்சமே 'ஜனநாயகன்' படத்தை இவ்வளவு காலம் கிடப்பில் போடக் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், படம் வெளியாகாவிட்டாலும் ஊடகங்களில் விஜய் தொடர்பான செய்திகள் தான் இன்றும் 'ட்ரெண்டிங்கில்' உள்ளன. ஆதவ் அர்ஜுனா மேடையில் ரஜினியைச் சீண்டியது முதல், பெண்களுக்கு 2,500 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் வரை எங்கு பார்த்தாலும் விஜய் பற்றிய பேச்சுகளே நிறைந்திருக்கின்றன.

பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் விஜய்க்கு அதிக அளவில் கிடைக்க வாய்ப்புள்ளதால், இந்தத் தேர்தலில் திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. தற்போதைய கள நிலவரப்படி, எந்தத் தனி ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை என்று தெரிகிறது. எனவே, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், அதிமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கவும், விஜய் முதலமைச்சராகவும் இபிஎஸ் (EPS) துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

Previous Post Next Post

Contact Form