சென்னை பெரம்பூர் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில பெண்கள் கள நிலவரம் குறித்துக் கணிப்பீடு (Survey) மேற்கொண்டபோது, இந்தத் தகவல் அமைச்சர் சேகர் பாபுவுக்குத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் தனது ஆட்களை அங்கே அனுப்பி அந்தப் பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருந்தபோதிலும், சேகர் பாபு அனுப்பிய நபர்கள் அந்தப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக, சேகர் பாபு தரப்பு இரண்டு பெண்களை ஏற்பாடு செய்து, தவெக பெண்கள் தங்களைத் தாக்கியதாகக் கூறி மருத்துவமனையில் படுத்தபடி தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுக்க வைத்துள்ளனர். ஆனால் அந்தப் பெண்களைப் பார்த்தால் ஏரியா ரவுடிகளே பயப்படும் அளவுக்கு 'சொர்ணாக்கா' ரேஞ்சில் இருக்கிறார்கள். "இவர்களையா தவெக பெண்கள் தாக்கியிருப்பார்கள்?" என்று மக்கள் மத்தியில் உடனே சந்தேகம் எழுந்துள்ளது. இந்த இரண்டு பெண்களுமே ரவுடிகள் போலத் தெரிவதாகப் பலரும் விமர்சிக்கின்றனர்.
இந்தச் செய்தி விஜய் காதுக்கு எட்டியதை அடுத்து, அவர் இது குறித்து விசாரித்துள்ளார். "வட சென்னை என்றாலே அது அமைச்சர் சேகர் பாபுவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது; போலீஸாரே அவரைப் பார்த்து நடுங்குகிறார்கள்; அதிலும் பெரம்பூரில் அவருக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது" என்று தவெக-வினர் விஜய்யிடம் தெரிவித்துள்ளனர். உடனே விஜய், தனது சினிமா பாணியில் "திருப்புடா வண்டியை!" என்று பெரம்பூர் தொகுதியிலேயே நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்ற அதிரடி முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் அமைச்சர் சேகர் பாபு தலையில் துண்டைப் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் விஜய் நின்றாலும் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பது ஊர் அறிந்த விஷயம். ஏற்கனவே மக்கள் மத்தியில் சேகர் பாபுவின் பெயர் மங்கி வரும் நிலையில், இப்போது விஜய் அதே தொகுதியில் போட்டியிட்டால் சேகர் பாபுவால் பின்வாங்கி ஓட முடியாது. வேறு தொகுதியைத் தேர்வு செய்தால் "பயந்து ஓடிவிட்டார்" என்ற அவப்பெயர் வரும்; நின்றால் தோல்வி நிச்சயம். இப்படி எடக்கு முடக்காகச் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு. உதயநிதிக்கு ஜால்ரா அடிப்பதே வேலையாகக் கொண்டிருக்கும் இவர், ஒரு கர்ப்பிணிப் பெண் மீது கை வைத்து வசமாக மாட்டிக்கொண்டார். செய்த பாவம் சும்மா விடுமா?
