அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 19 வயது மகன் பேரன் ட்ரம்ப், கடந்த 2025 ஜனவரியில் லண்டனில் உள்ள தனது தோழியுடன் ஃபேஸ்டைம் (FaceTime) மூலம் பேச முயற்சித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், பேரன் ட்ரம்ப் மற்றும் போலீசாருக்கு இடையிலான உரையாடல் ஒலிப்பதிவு ஆதாரமாகப் சமர்ப்பிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட மட்வே ரூமியான்ட்சேவ், பேரன் ட்ரம்ப்புடன் தனது காதலி நட்பாகப் பழகுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையில் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், "பேரன் ட்ரம்ப் அன்று அந்த போன் காலைச் செய்யவில்லை என்றால், இந்நேரம் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்; அது கடவுள் கொடுத்த அடையாளம் போல இருந்தது" என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் மட்வே ரூமியான்ட்சேவ் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தனது தந்தையின் பதவியேற்பு விழாவிற்குச் செல்லும் பரபரப்பான சூழலிலும், ஒரு தோழியின் உயிரைக் காப்பாற்ற பேரன் ட்ரம்ப் காட்டிய சமயோசித புத்தி மற்றும் மனிதாபிமானத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.
