Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

ஈரான் அணு ஆயுதமே தயாரிக்க மாட்டேன்னு என்கிட்ட சத்தியம் பண்ணிட்டாங்க- TRUMP போட்ட போடு !

 

மெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் என்னவோ நாளுக்கு நாள் முற்றிப்போயிட்டே இருக்கு, ஆனா நம்ம ரம் மாமா (Trump) கொடுக்கிற ஸ்டேட்மென்ட் தான் இப்ப உலகத்துக்கே பெரிய 'காமெடி' பீஸா போயிருக்கு. இந்த போர் முடியுறதுக்கு வாய்ப்பே இல்லைனு எல்லாருக்கும் தெரியும், ஆனா ரம் மாமா திடீர்னு மீடியா முன்னாடி வந்து, "ஈரான் கூட நான் ஒரு சூப்பர் டீல் பேசிட்டேன், அவங்க இனிமே அணு ஆயுதமே தயாரிக்க மாட்டேன்னு என்கிட்ட சத்தியம் பண்ணிட்டாங்க"னு ஒரு குண்டை தூக்கிப் போட்டுருக்காரு. 

இதைக் கேட்டுட்டு உலக நாடுகள் எல்லாம், "ஆமா.. அவரு சொன்ன உடனே இவங்க கேட்டுருவாங்க!"னு நக்கலா சிரிச்சுட்டு இருக்காங்க. ஆரம்பத்துல அவரும் இஸ்ரேலும் சேர்ந்து போர்னு ஆரம்பிச்சு வச்சுட்டு, இப்ப உலகம் முழுதும் தட்டுப்பாடு வந்து தத்தளிக்கும் போது, இப்படி ஒரு 'பயங்கரமான' ஐடியாவோட கிளம்பி வந்திருக்காரு நம்ம தலைவர்.

இந்த சமாதான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து நடத்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை ரம் மாமா களத்துல இறக்கிவிட்டுருக்காரு. ஈரானோட எரிசக்தி மையங்கள் மேல தாக்குதல் நடத்துறதை ஒரு அஞ்சு நாளைக்கு நிறுத்தி வைக்கவும் அவர் உத்தரவிட்டுருக்காரு. "ஈரான் காரங்க இப்ப ரொம்ப சமத்தா பேசுறாங்க, அவங்களுக்கு நல்ல புத்தி வந்துடுச்சு"னு ரம் மாமா வெள்ளை மாளிகையில உட்கார்ந்துட்டு சர்டிபிகேட் குடுத்துட்டு இருக்காரு. ஆனா உண்மை என்னன்னா, இது ஒரு பக்கம் சமாதானம்னு பேசிக்கிட்டே இன்னொரு பக்கம் போரைத் தீவிரப்படுத்துற தந்திரமோனு பலரும் சந்தேகப்படுறாங்க.

விஷயம் இதோட முடியல, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) இந்த சமாதான பேச்சையெல்லாம் சுத்தமா ரசிக்கலையாம். "எனக்கு இந்த சமாதானம் எல்லாம் செட் ஆகாது, குண்டுகளை போட்டு தள்ளுறது தான் என்னோட ஸ்டைல்"னு அவரு ஓப்பனா சொல்லிட்டதா ரம் மாமாவே கிண்டல் பண்ணிருக்காரு. "நாங்க குண்டுகள் மூலமா தான் பேச்சுவார்த்தை நடத்துவோம்"னு பீட் ஹெக்செத் சொன்னது, அமெரிக்காவுக்குள்ளேயே பெரிய விவாதத்தை கிளப்பிருக்கு. ஒரு பக்கம் 'டீல்' பேசுறோம்னு சொல்லிட்டு, இன்னொரு பக்கம் 7,000-க்கும் மேற்பட்ட இடங்கள்ல தாக்குதல் நடத்தி ஈரானை உருக்குலைய வச்சுட்டோம்னு அமெரிக்கா பெருமை பேசிட்டு இருக்கு.

ஆனா கடைசியில பார்த்தா, சமாதானம்னு சொல்லிக்கிட்டே சுமார் 3,000 கூடுதல் வீரர்களை அமெரிக்கா இப்ப மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பத் தயாரா இருக்கு. இது எப்போ வேணும்னாலும் ஒரு தரைவழித் தாக்குதலா (Ground Invasion) மாறலாம்னு ராணுவ வட்டாரங்கள் சொல்லுது. ரம் மாமா "டீல் முடிஞ்சிருச்சு"னு சொன்னாலும், ஈரான் தரப்புல இருந்து "அப்படி எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடக்கல"னு ஒரே போடா போட்டுட்டாங்க. மொத்தத்துல, இந்த போர் முடியுற மாதிரி தெரியல, ஆனா ரம் மாமா மட்டும் தன்னோட வழக்கமான ஸ்டைல்ல உலகத்தை ஒரு 'சுத்து' சுத்த விட்டுட்டு இருக்காரு!

Share this news: Back to Home