வெளியிடப்பட்ட கருநிற (black & white) வீடியோவில், ஒரு அமெரிக்க போர் விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தாக்குதல் உண்மையானதா? அல்லது உளவியல் போர் (propaganda) முயற்சியா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இருந்தாலும், இது உண்மையானதாக இருந்தால், ஒரு combat mission நடந்து கொண்டிருந்த F-35 விமானம் தாக்கப்பட்ட முதல் சம்பவமாக அமையும்.
இந்நிலையில், அமெரிக்க மத்திய கட்டளை (US Central Command) அந்த விமானம் ஈரான் வான்வெளியில் பறக்கும் போது அவசரமாக தரையிறக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. விமானி பாதுகாப்பாக உள்ளதாகவும், அவரது நிலைமை ஸ்திரமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது emergency landing சூழ்நிலையை உருவாக்கிய முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், இதற்கு சில நிமிடங்களுக்குள் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும், “யாரும் எங்களை தாக்கவில்லை” என்றும் தெரிவித்தார். இந்த முரண்பட்ட தகவல்கள், இந்த போர் நிலைமையில் தகவல் குழப்பத்தை அதிகரித்துள்ளது. இதே நேரத்தில், ஈரான் தொடர்ந்து மேற்கொண்ட தாக்குதல்களில், இஸ்ரேலின் ஹைஃபா பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது.
இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் உலக பொருளாதாரத்தையும் நேரடியாக பாதிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 4.9% உயர்ந்துள்ள நிலையில், Brent crude விலை ஒரு பேரலுக்கு $118 வரை உயர்ந்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து 60% க்கும் மேல் உயர்ந்துள்ள இந்த எண்ணெய் விலை, உலகளாவிய global market மற்றும் எரிசக்தி விநியோகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமை மேலும் மோசமடையுமா என்ற அச்சம் உலக நாடுகளில் அதிகரித்து வருகிறது.
