இன்றுடன் தேர்தலுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில், விஜயின் TVK கட்சி ஒரு வாரத்திற்கு முன்பே 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நியமித்து, அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அவர்கள் தங்களுக்கான தொகுதிகளுக்கு சென்று பணிகளைத் தொடங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விஜயை சந்தித்து பேசிய பின்னர், அந்த வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் இறங்கி வேலை செய்யத் தொடங்கி சுமார் ஒரு வாரமாகிறது. ஆனால் திமுக மற்றும் அதிமுக போன்ற பெரிய கட்சிகள் இன்றுவரை இழுபறி நிலையில் உள்ளன.
இன்று 23ஆம் தேதி ஆகியும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவது, எந்தக் கட்சிக்கு எந்த தொகுதி வழங்குவது போன்ற பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. குறிப்பாக திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதால் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு விருப்பமான தொகுதியையே கோர, மறுபுறம் சேகர் பாபு போன்ற திமுக பிரபலங்கள் மற்றும் சில அமைச்சர்கள் தமது பழைய தொகுதி வேண்டாம், புதிய தொகுதி தர வேண்டும் என்று ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததால் திமுக பெரும் குழப்பத்தில் உள்ளது.
கடந்த தேர்தலில் வென்ற சில MLAக்களும் கூட இம்முறை அதே தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்று வலியுறுத்துவது திமுகவை மேலும் திணறவைக்கிறது. அவர்கள் தோல்வி அடைவோம் என்ற அச்சத்தில் இருப்பது போல சூழல் தெரிகிறது. இதேவேளை அதிமுக கூட்டணியைப் பார்த்தால், BJP கட்சி கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஒரு வகையில் BJP-யை கூட்டணியில் எடுப்பதே தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகியுள்ளதால், அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் கட்சி தாவவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் TVK மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதால், அவர்களுக்கு எந்த கூட்டணி பிரச்சனையும் இல்லை. அவர்களின் வேட்பாளர்கள் ஏற்கனவே களத்தில் இறங்கி பணிகளைத் தொடங்கி விட்டனர். இதனால் அவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக TVK எடுத்த திடீர் முடிவுகள் — அதிலும் 60 வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்தது — அவர்களின் வெற்றியை மேலும் உறுதிசெய்கிறது. 234 தொகுதிகளில் 118 இடங்களை வென்றால் மட்டுமே தனியாக ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தற்போதைய நிலையைப் பார்த்தால், திமுக 65 முதல் 70 இடங்கள், அதிமுக கூட்டணி 70 முதல் 72 இடங்கள், நாம் தமிழர் கட்சி 2 அல்லது 3 இடங்கள், விஜயின் TVK கட்சி 67 அல்லது 68 இடங்களைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
எனவே எந்தக் கட்சியும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. மூன்று முக்கிய கட்சிகளும் 60 முதல் 70 இடங்களுக்கு இடையில் மட்டுமே வெற்றி பெறும் சூழல் உள்ளது. இரண்டு கட்சிகள் இணைந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும். இதனால் நாம் தமிழர் கட்சி + TVK + அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகம் என எமது கணிப்பு கூறுகிறது. இதுவே நடக்கும் வாய்ப்பும் உள்ளது. இதனை துல்லியமாக கணித்து விஜய் எடுத்த அதிரடி முடிவே இந்த 60 வேட்பாளர் அறிவிப்பு. எனவே “விஜய்க்கு அரசியல் தெரியாது” என்று பேசுபவர்களின் வாயில் மண்ணை தூவியுள்ளார் விஜய் — அதுவே உண்மை.
