அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சற்று முன் திடீரென வெடித்து தீப்பிடித்தது. அந்த வெடிப்பு சத்தம் பல மைல் தூரத்திலிருந்தே கேட்கப்பட்டதால், மக்கள் அதிர்ச்சியில் வீடுகளை விட்டு ஓடிவந்தனர். பலர் இது ஈரான் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என்று தவறாக நினைத்து, panic அடைந்து பாதுகாப்புக்காக சாலைகளில் ஓடிச் சென்றனர். சமூக வலைதளங்களில் சில நொடிகளில் explosion, attack, emergency போன்ற வார்த்தைகள் பரவியதால், அச்சம் மேலும் அதிகரித்தது.
டெக்சாஸ் மாநிலம் போர்ட் ஆர்தரில் உள்ள வாலெரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இந்த வெடிப்பால் கரும்புகை வானத்தை மூடித்தள்ளியது. தினமும் 4.35 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயை பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருளாக மாற்றும் இந்த நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து, நகரம் முழுவதும் crisis நிலையை ஏற்படுத்தியது. பல வீடுகள் குலுங்கும் அளவுக்கு ஏற்பட்ட வெடிப்பு சத்தம், மக்கள் மனதில் “இது சாதாரண விபத்து அல்ல” என்ற சந்தேகத்தை தூண்டியது.
ஜெஃபர்சன் கவுண்டி ஷெரிப் சேனா ஸ்டீபன்ஸ் கூறியதாவது, தொழிற்சாலையின் ஒரு industrial heater பழுதடைந்ததே இந்த வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. எந்த உயிரிழப்பும் இல்லை என்றாலும், நகரின் மேற்கு பகுதி முழுவதும் “வீட்டுக்குள் இருங்கள்” என்ற அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜன்னல்கள், கதவுகள் அனைத்தையும் மூடி, அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வாலெரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “தீ ஏற்பட்ட பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். முன்னெச்சரிக்கையாக 82 மற்றும் 87 மாநில நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எங்கள் பணியாளர்களின் பாதுகாப்பே எப்போதும் எங்களின் மிகப்பெரிய முன்னுரிமை” என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் ஏற்கனவே நிலவும் tension சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
