Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

MI-5 REPORT: பிரசவ வார்டில் குண்டை வெடிக்க வந்த நபரை பேசியே தடுத்து நிறுத்திய "நேதன் நியூபி"

LONDON: 25-03-2026 7:50am GMT: 

பிரிட்டனின் லீட்ஸ் (Leeds) நகரில் உள்ள St James's Hospital மகப்பேறு பிரிவு அருகே, ஒரு பெரும் சம்பவம் நடைபெற இருந்தது. முகமது ஃபாரூக் என்ற நபர் 10 கிலோ எடையுள்ள வெடிகுண்டுடன் அங்கே வந்திருந்தார். 

அந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நேதன் நியூபி (Nathan Newby) என்பவர், அந்த நபர் மிகவும் பதற்றமாக இருப்பதை கவனித்தார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த நியூபி, அங்கிருந்து ஓடாமல் துணிச்சலாக அவரிடம் பேசத் தொடங்கினார். 

பிரிட்டன் MI-5 உளவுத்துறை வெளியிட்ட தகவல் இதோ தமிழில் ... 

சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அந்த நபரிடம் அன்பாகவும் நிதானமாகவும் பேசிய நியூபி, அவரைத் திசைதிருப்பினார். ஒருகட்டத்தில் அந்த நபர் தனது பையில் குண்டு இருப்பதை ஒப்புக்கொண்டார். அந்த இக்கட்டான சூழலிலும் பதற்றமடையாத நியூபி, அவரைப் பேச்சாலேயே சமாதானப்படுத்தி, மருத்துவமனை கட்டிடத்தை விட்டுத் தள்ளி ஒரு பெஞ்சில் உட்கார வைத்தார்.

இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இறுதியில் அந்த நபர் தனது திட்டத்தைக் கைவிட்டு, நியூபியிடமே போனை கொடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கச் சொன்னார். 

இந்த அதீத துணிச்சலைப் பாராட்டி, நேதன் நியூபிக்கு பிரிட்டனின் இரண்டாவது உயரிய விருதான George Medal வழங்கப்பட உள்ளது. இது குறித்து முதல்முறையாகப் பேசியுள்ள அவர், "அந்தச் சூழலில் யாருக்காவது உதவி தேவைப்படுகிறது என்றுதான் நான் நினைத்தேன்; அது இவ்வளவு பெரிய குண்டுவெடிப்புச் சதி என்று தெரியாது" எனத் தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண மனிதனின் கனிவான பேச்சு, அன்று நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 2023ம் ஆண்டு நடந்துள்ளது. ஆனால் பிரித்தானிய பொலிசாரும் சரி, பிரித்தானிய உளவுத் துறையும் சரி இது தொடர்பாக வாயே திறக்கவில்லை. மேலும் பல தடவைகள், தாம் பல சதிகளை தடுத்து நிறுத்தியுள்ளோம் என்று மட்டுமே பிரித்தானிய உளவுத் துறை கூறி வருகிறது. ஆனால் உண்மையில் அதன் பின்னால் பல விடையங்கள் உள்ளது. அதனை அவர்கள் சில ஆண்டுகள் கழித்தே வெளியிடுகிறார்கள். மற்றும் தகவல் அறியும் சட்டம் ஊடாக சில மீடியாக்கள் இந்த ரகசிய தகவல்களை வெளியிடுகிறது. அந்த வகையில் நேற்று பிரிட்டன் உளவுத் துறை வெளியிட்ட இந்த அறிக்கையை நாம் தமிழில் தந்துள்ளோம். மேலும் இது போன்ற செய்திகளை அறிய அதிர்வு இணையத்தோடு இணைந்திருங்கள். 

Share this news: Back to Home