இந்த விமானங்கள் வானில் பறந்தவாறே போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் பணியைச் செய்பவை. நீண்ட நேரம் பணியில் ஈடுபட்டுவிட்டு, சவுதியில் உள்ள அமெரிக்கத் தளத்திற்குத் திரும்பிய சில நிமிடங்களிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து, ஈரான் மிகவும் துல்லியமான உளவுத் தகவல்களைப் பெற்று, இந்தத் தாக்குதலை மிகவும் நேர்த்தியாகத் திட்டமிட்டு நடத்தியுள்ளது என்பது தெரிகிறது.
வளைகுடாவில் நிற்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்களில் இருந்து இதுவரை சுமார் 900-க்கும் மேற்பட்ட டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகள் ஈரான் நோக்கி ஏவப்பட்டுள்ளன. இவை பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடியவை. டோமாஹாக் ஏவுகணைகளை அமெரிக்கா ஆண்டுக்குச் சுமார் 100 முதல் 120 வரை மட்டுமே தயாரித்து வரும் நிலையில், ஒன்பது ஆண்டுகளில் தயாரிக்க வேண்டிய மொத்த ஏவுகணைகளையும் ஒரு சில நாட்களிலேயே அமெரிக்கத் துருப்புகள் பயன்படுத்தி முடித்துவிட்டன என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். இதனால் அமெரிக்காவின் கையிருப்பில் கடும் ஆயுதப் பற்றாக்குறை தோன்றியுள்ளது.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியும் ஈரானை வெல்ல முடியவில்லை. இன்றுவரை ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது; அங்கே எந்தவொரு போர்க்கப்பலும் செல்லத் துணியவில்லை. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க அதிபரைத் தூண்டிவிட்டு ஈரான் மீது ஒரு போரைத் தொடங்கி வைத்துள்ளார். இதில் அமெரிக்காதான் பெருமளவில் ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளதே தவிர, இஸ்ரேல் அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை மட்டும் நடத்திவிட்டு, அமெரிக்காவுக்கு உதவுவது போல நாடகமாடுகிறது. உண்மையில் இஸ்ரேல் தனது சாதுரியமான சிந்தனையால் அமெரிக்காவைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியுள்ளது.
இதை உணராமல், மற்ற விவகாரங்களில் கவனத்தைச் செலுத்தி வந்த டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பேச்சைக் கேட்டு ஈரான் மீது கைவைத்தது இப்போது அவருக்கே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் தற்போது அமெரிக்காவைக் குற்றம் சொல்லத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமெரிக்க நிர்வாகம் திகைத்து நிற்கிறது. இப்படியே நிலைமை நீடித்தால் அமெரிக்காவில் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்படக்கூடும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
