Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

திமுக-அதிமுக இன்றும் திணறும் நிலையில் இருக்க -TVKகட்சியின் 234 வேட்பாளர்கள் ரெடி

 

25 தொடக்கம் 30 சிறிய சிறிய கட்சிகளை எல்லாம் ஒன்று சேர்த்து பெரும் மெகா கூட்டணி ஒன்றை உருவாக்கி வருகிறது திமுக. எங்கே தேர்தலில் தோற்று விடுவோமோ என்ற அச்சமே இதற்கு காரணம். ஆனால் இன்றுவரை, தொகுதிப் பங்கீடு முடிந்தபாடாக இல்லை. இதே நிலை தான் NDA கூட்டணிக்கும்,. ஆனால் விஜயின் TVK கட்சி 234 வேட்ப்பாளர்களையும் தெரிவு செய்து விட்டது. 

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தி முடித்துள்ளார். அந்த நேர்காணல்களின் அடிப்படையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேட்பாளர்களின் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, பட்டியல் விஜய்க்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் இறுதி ஒப்புதல் வழங்கியதும், முழு பட்டியலை வெளியிடத் தயாராகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதற்கட்டமாக சிலர் கட்சி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு ஆவண பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், 234 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை நடிகர் விஜய் நாளை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்த உள்ளார். சென்னை நகரில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சி அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. பட்டியல் வெளியீட்டுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு விஜய் உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரம் தொடங்கி, அதன் பின்னர் கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் மேலும் பரபரப்பாகும் நிலை உருவாகியுள்ளது.

Share this news: Back to Home