தமிழக தேர்தல் முடியறதுக்குள்ள, விஜய் மேல குறைந்தது ஒரு 100 கேஸாவது போட்டுடணும்னு போலீஸ் பிளான் பண்ணிட்டாங்க போலிருக்கே? நேற்றைய தினம் விஜய் அவர்கள், முதலில் தான் போட்டியிடப்போகும் பெரம்பூர் தொகுதிக்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, அப்படியே நேராக முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிக்கு விசிட் அடிச்சிருக்காரு. இது ஒன்னும் எதார்த்தமா நடந்த விஷயம் கிடையாது; பக்கா ஸ்கெட்ச்!
"நான் கொளத்தூர் வந்தா என்ன நடக்கும்?" அப்படின்னு ஸ்டாலினுக்கே நேருக்கு நேர் காட்டியிருக்காரு விஜய். "உங்க கோட்டையிலேயே எனக்கு எந்த அளவு கெத்து இருக்குன்னு பாருங்க" அப்படின்னு விஜய் விடுத்த நேரடி சவால் தான் இந்த கொளத்தூர் மேட்டர். சும்மா சொல்லக் கூடாதுங்க, காசு கொடுத்து ஆட்களைக் கூட்டிட்டு வந்தா கூட இந்த அளவுக்குக் கூட்டத்தைச் சேர்க்க முடியாது. அந்த அளவுக்கு ஜனங்க கொளத்தூரில் அலைமோதிட்டாங்க. அதுவும் விஜய் பேசின பேச்சு இருக்கே... சும்மா அதிருதுல்ல! இதைப் பார்த்துட்டு, எங்க நம்ம செல்வாக்கை இழந்துடுவோமோன்னு "உடன்பிறப்புகள்" எல்லாம் செமையா அப்செட் ஆகிட்டாங்க.
நேற்று நைட்டே திமுக கூடாரத்துல அவசர அவசரமா மந்திர ஆலோசனை நடந்து, ஒரு வழியா ஒரு முடிவுக்கு வந்திருக்காங்க. அதன்படி, இன்னைக்குத் தமிழக போலீஸ் விஜய் மேல நேரடியா 5 கேஸ்களை ஃபைல் பண்ணியிருக்காங்க. அதாவது எலெக்ஷனுக்கு முன்னாடி அடுக்கடுக்கா வழக்குகளைப் போட்டு, கோர்ட் கேஸ்னு அலைய விட்டு, விஜய்யைப் பிரச்சாரம் செய்யவிடாம தடுக்குறது தான் இந்த திமுகவோட மாஸ்டர் பிளான். விஜய் ஏன் திமுகவை "தீய சக்தி" அப்படின்னு சொன்னாருங்கறது இப்போ மக்களுக்குத் தெளிவாப் புரியுது.
ஆனா, திமுக அரசு தன் தலையில தானே மண்ணை வாரிப் போட்டுக்குதுன்னு தான் சொல்லணும். ஏன்னா, இந்த நியூஸ் எல்லாமே இப்போ சோஷியல் மீடியால மரண வெயிட்டிங்ல ட்ரெண்டிங் ஆகிட்டு இருக்கு. மக்கள் இப்போ சன் டிவியையும் தினகரனையும் மட்டும் பார்த்துட்டு இருக்கிறது இல்லையே? "சோஷியல் மீடியா" அப்படிங்கிற ஒரு பவர்புல்லான சக்தி இருக்குங்கறதை மறந்துட்டு ஸ்டாலின் போடுற இந்த கூத்தால, மொத்த திமுகவும் மண்ணைக் கவ்வப் போகுது போலிருக்கே? மக்களே விஜய்யைப் பார்த்து "பாவம்" அப்படின்னு நினைக்கிற அளவுக்கு திமுக அரசு செஞ்சுட்டு இருக்கு. இதுக்கெல்லாம் பதில் மே மாதம் 4-ம் தேதி ரிசல்ட்ல தெரிஞ்சுடும்!
