SPB-க்கு கொரோனா..! அவரே வெளியிட்ட வீடியோ கவலையில் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் சமானிய மக்கள் முதல், திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் வரை அனைவரையும் தாக்கி வருகிறது. ஏற்கனவே, அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர், அமித்ஷா உள்ளிட்ட மிப்பெரிய பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகரும், பிரபல பாடகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதையடுத்து, பலரும் அவருக்கு செல்போனில் அழைப்பு விடுத்து நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், தன்னுடைய உடல்நலம் குறித்து வீடியோ ஒன்றை எஸ்.பி.பி. வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், கொரோனாவுக்கான அறிகுறிகள் தனக்கு இருந்ததாகவும், இதனால் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டதாகவும் தெரிவித்த அவர், தனக்கு மிக மிக குறைந்த அளவில் கொரோனா இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Contact Us