ரம்பின் வெளிநாட்டு அமைச்சருக்கு சீனா தடை- மேலும் 27 பேருக்கு தடை என அறிவித்துள்ளது !

28 நபர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் சீனா, ஹாங்காங், மக்காவோவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் சீனாவுடன் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு சீனாவுக்கு பல்வேறு விவகாரங்களில் அழுத்தம் கொடுத்துவந்தது. தைவான், திபெத், ஹாங்காங் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் சீன நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது.

அண்மையில், `சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில், முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான சீனாவின் கொள்கைகள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள்’ என்றும், `இனப்படுகொலை’ என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டியிருந்தார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சீனாவின் கொள்கைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தது, சீனாவுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகத்தின் கடைசிகட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மீதும், முந்தைய ட்ரம்ப் நிர்வாகத்துடன் தொடர்புடைய 27 பேர் மீதும் சீனா பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. இதை சீன அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

Contact Us