இரண்டு பெண்கள் செய்த தில்லாலங்கடி- கேவலமான செயல்!

தமிழகத்தில் அந்தரங்க வீடியோவை எடுத்து வைத்து மிரட்டிய பெண் சம்பவத்தில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசிம்மன். ஆந்திராவை சேர்ந்த இவர் கோயம்புத்தூரில் தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜசிம்மனுக்கு, உமாராணி என்ற பெண், மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகியுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த உமாராணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

இருப்பினும், ராஜசிம்மன் ஒரு தொழிலதிபராக இருப்பதால், அவர் மீது உமாராணிக்கு ஆசை வந்துள்ளது. இதனால் திருமணம் ஆனதை மறைத்துவிட்டு, ராஜசிம்மனிடம் நெருக்கமாக பழகி உள்ளார். இதையடுத்து, ஹைதராபாத்தில் லாட்ஜிம் அறையை பதிவு செய்த உமாராணி, ராஜசிம்மனை அங்கு வரவழைத்துள்ளார்.

அதன் பின் திடீரெனு, தன்னை அந்தரங்கமாகவும், ஆபாசமாகவும் வீடியோ எடுத்து மிரட்டியதாக ராஜசிம்மன் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்நிலையத்தில் உமாராணி புகார் தந்தார். இந்த வழக்கு குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கட்ட பஞ்சாயத்து மூலம் உமாராணி, ராஜசிம்மனிடம் இருந்து 28 லட்சம் ரூபாய் மிரட்டி வசூலித்துள்ளார்.

இதற்கு விஷ்ணுப்ரியா என்ற பெண்ணும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த விஷ்ணுபிரியா என்பவரும் ராஜசிம்மன் மீது ஆசைப்பட்டவராம். இறுதியில் ராஜசிம்மனை கைது செய்த ஆயிரம் விளக்கு பொலிசார் சிறையில் அடைத்துள்ளார். சிறைக்குள் போகும்முன், ராஜசிம்மனின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என மொத்தத்தையும் இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் பிடுங்கி வைத்துக் கொண்டு, வங்கியில் அவர் தேவைக்கு ஏற்ப பணத்தை எடுத்து செலவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், ராஜசிம்மன் சிறையில் இருந்து வெளியில் வர, உடனடியாக ஞானசெல்வம், உமாராணி, விஷ்ணுபிரியா என 3 பேர் மீதும் ஒரு புகார் மனு தந்தார்.அதற்குரிய ஆதாரங்களையும் ஆந்த மனுவுடன் இணைத்து கொடுத்திருந்தார். அந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் உமாராணி முதலில் சிக்கினார் லாட்ஜில் ரூம் போட்டது முதல் அவர் செய்த அனைத்து தில்லாலங்கடி விஷயங்களும் வெளிச்சத்துக்கு வந்தன.

அடுத்ததாக இன்ஸ்பெக்டர் ஞானசெல்வமும், விஷ்ணுபிரியாவும் சிக்கி உள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விஷ்ணுபிரியா சென்னையை சேர்ந்தவர். இவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறாராம். உமாராணி ராஜசிம்மனை விரும்பிய நேரத்தில்தான், இவரும் ராஜசிம்மன் மீது ஆசைப்பட்டுள்ளார்.

இதில் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Contact Us