தமிழ் பிக்பாஸ்சின் உண்மையான டைட்டில் வின்னர் இவர் தானாம்; அவர் இல்லையாம்!

தமிழகத்தில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ், இதில் தமிழில் தற்போது வரை நான்கு சீசன் முடிவடைந்துள்ளது. இதில் சென்ற வாரம் தான் பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி போட்டி நடந்து நடிகர் ஆரி டைட்டில் வின்னர் ஆனார் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

பிக் பாஸ் சீசன் நான்கை விட பிக் பாஸ் சீசன் 3 மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. அதில் பிக் பாஸ் சீசன் 3ன் வெற்றியாளராக மக்களின் வாக்குகள் மூலம் முகின் ராவ் டைட்டில் வின்னர் ஆனார், என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் முகின் கிடையாதாம். பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் நடிகர் கவின் என்று கூறி ஓட்டின் லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த ஓட்டின் லிஸ்ட் பிக் பாஸ் சீசன் 3ன் பைனல் போட்டிக்காக மக்களால் வாக்களிக்கப்பட்டது என்று தெரிவிக்கின்றனர்.

இதில், மக்களின் வாக்குகள் மூலம் முதலிடத்தை பிடித்திருந்த கவின் பிக் பாஸ் சீசன் 3ல் 5 லட்சம் பணத்துடன் வெளியேறிய காரணத்தினால், அவருக்கு அடுத்தபடியாக, இரண்டாம் இடத்தில் இருந்த முகினுக்கு பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை கவின் அந்த 5 லட்சம் பணத்தை எடுக்காமல் இருந்திருந்தால், பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் கவின் என்று கூறி அவரது ரசிகர்கள் டுவிட்டரில் இதனை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியவில்லை, ஆனால் இப்படியொரு தகவல் பரவி வருகிறது.

Contact Us