லண்டனில் பிள்ளைகள் படிப்பு நாசம்: ஏப்பிரல் மாதம் வரை பள்ளிகளை மூட திட்டம் !

தென்னாபிரிக்க உருமாறிய வைரஸ், அதன் பின்னர் பிரேசில் வைரஸ் தற்போது சொந்த நாடான பிரித்தானியாவில் உள்ள KENT என்னும் இடத்தில் பண்ணை ஒன்றில் உருமாறிய வைரஸ் ஒன்று தோன்றியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்று அறியப்பட்டுள்ளது. இதன் பரவலை தடுக்க தற்போது பிரித்தானியா கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக பாடசாலைகளை April மாதம் வரை மூடிவைக்க வேண்டும் என்று சுகாதார துறை பரிந்துரை செய்துள்ளது, இதனை கல்வித்துறை அமைச்சர் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில். கல்விதுறை அமைச்சர் இது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாக சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2020ம் ஆண்டு தொடக்கம், பிள்ளைகளின் படிப்பு நாசமாகிக் கொண்டு இருக்கிறது. ஆன் லைன் கிளாஸ் என்று எடுத்தாலும் அது சரியாக செயல்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில். இன்னும் 2 மாதங்களுக்கு பாடசாலைகளை மூடுவது என்பது, பெரும் பின்னடைவைக் கொடுக்கும் என்று பெற்றோர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்கள்.

Contact Us