இலங்கை பொலிசாருக்கு பயிற்ச்சி கொடுக்க வேண்டாம் பிரித்தானிய அரசிடம் முறையிட்ட சர்வதேச அமைப்பு !

இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொலிஸ் பயிற்சித் திட்டங்களை நிறுத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரசாரம் என்ற அமைப்பு (Campaign Against Arms Trade) அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், பொலிஸ் கல்லூரி வழங்கும் அனைத்து சர்வதேசப் பயிற்சிகளையும் மதிப்பாய்வு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.

2012இல் கல்லூரி நிறுவப்பட்டதிலிருந்து, குறைந்தபட்சம் 76 நாடுகளுக்கு பயிற்சி மற்றும் உதவிகளை வழங்கியுள்ளதாக ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரசாரம் அமைப்பு தெரிவித்துள்ளது.அத்துடன், வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் அலுவலகத்தால் (Foreign & Commonwealth Office) மனித உரிமைகள் கவனிக்கப்படும் நாடுகளாகப் பட்டியலிடப்பட்ட 12 நாடுகளுக்கும் இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், சீனா, கொலம்பியா, எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ருவண்டா, சவுதி அரேபியா, சோமாலியா, இலங்கை மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான பொலிஸ் படைகளைக் கொண்ட பல நாடுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை, வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் அலுவலகத்தின் பட்டியலில் இல்லை. ஆனால், இவற்றில் இங்கிலாந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளும் உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Contact Us