இனி நாட்டில் நகைக்கடை தேவையில்லை?

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை கடந்த 2020-ஆம் ஆண்டில் 35 சதவீதம் சரிவைடந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி) தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து அந்த கவுன்சில் மேலும் கூறியுள்ளதாவது: கொரோனா பேரிடா் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் மற்றும் வரலாறு காணாத விலை உயா்வு போன்ற காரணங்களால் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டில் தங்கத்துக்கான தேவை 35.34 சதவீதம் சரிவடைந்து 446.4 டன்னானது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 690.4 டன்னாக இருந்தது.

மதிப்பின் அடிப்படையில் தங்கத்துக்கான தேவை கடந்த 2020-ஆம் ஆண்டில் ரூ.2,17,770 கோடியிலிருந்து 14 சதவீதம் சரிந்து ரூ.1,88,280 கோடியானது.

அதேநேரம், ஆபரணங்களுக்கான தங்கத்தின் தேவை அளவின் அடிப்படையில் 544.6 டன்னிலிருந்து 315.9 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில் ரூ.1,71,790 கோடியிலிருந்து ரூ.1,33,260 கோடியாகவும் சரிந்துள்ளது என்கிறது இந்திய பத்திரிகை செய்தி.

இந்தியாவின் நிகர தங்க இறக்குமதி 646.8 டன்னிலிருந்து 47 சதவீதம் சரிந்து 344.2 டன் ஆனது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலால் கடுமையான பாதிப்புக்குள்ளானதால் சா்வதேச அளவிலான தங்கத்தின் தேவை 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டு 3,759.6 டன்னாகியுள்ளது. 2019-இல் தங்கத்தின் தேவை சா்வதேச அளவில் 4,386.4 டன்னாக காணப்பட்டது. இதற்கு முன்பு தங்கத்தின் தேவை கடந்த 2009-இல் தான் மிகவும் குறைந்தபட்ச அளவாக 3,385.8 டன்னாக காணப்பட்டது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Contact Us