சீன ஊடுருவலை தடுக்க எல்லையில் இந்தியா வகுத்துள்ள புதிய வியூகம்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை அண்டை நாடான சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல் எல்லையில் சீன ராணுவம் அவ்வ போது அத்துமீறி ஊடுருவுவதும், அதை இந்திய ராணுவம் விரட்டியடிப்பதும் தொடர் கதையாக உள்ளது. அருணாச்சல் எல்லையை ஒட்டியுள்ள சீனாவின் நியுஞ்சி பகுதியில், ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை, சீன அரசு பலப்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சலில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியிலிருந்து, 30 கி.மீ., துாரத்தில் உள்ள இந்திய பகுதியில் பாதுகாப்பு அரண் அமைக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.

இதற்காக அருணாச்சலின் மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பல ஏக்கர் நிலத்தை ராணுவம் கையகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Contact Us