ஊசி போட மறுக்கும் ஜகோபா கிறீஸ்தவர்கள்- கர்த்தர் காப்பாற்றுவார் என்று கூறி இறக்கும் கொடுமை !

பிரித்தானியாவில் தடுப்பூசி போடும் வாய்ப்பு கிடைத்தும், கர்த்தர் எங்களை காப்பாற்றுவார் நாங்கள் ஊசி போட்டுக் கொள்ள மாட்டோம் என்று கூறிய பல ஜகோபா விட்னஸ் நபர்கள் பரிதாபமாக இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் மத நம்பிக்கை காரணமாக எந்த ஒரு மருந்தையும் எடுப்பது இல்லை. இன் நிலையில், மேலும் பல ஆயிரம் மக்கள் தடுப்பு மருந்து மீது நம்பிக்கை இல்லாமல் அதனை எடுக்கவில்லை.

இதனால் நேற்றைய தினம்(25) பிரித்தானிய மகாராணியார் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தடுப்பு மருந்தை நீங்கள் சுய நலம் காரணமாக எடுக்கவில்லை என்றால். மற்றவர்களை பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நீங்களும் தடுப்பு மருந்தை எடுக்காமல், வேறு நபர்களுக்கு உங்கள் கொரோனா நோயை ஏன் தொற்றுக் கொடுக்க வேண்டும் ? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தடுப்பு மருந்து எனக்கும் போடப்பட்டது. எனவே தான் நான் இதனை துணிந்து சொல்கிறேன். இந்த மருந்து ஆபத்தானது அல்ல என்று அவர் பிரித்தானிய மக்களுக்கு மேலும் ஒரு முறை வேண்டுகோள் விடுத்துள்ளார். செவி சாய்ப்பார்களா மக்கள் ?