பீச்சுக்கு போன நபர்களை தேடி தேடி டிக்கெட் கொடுத்த பொலிஸ்: ஒரே நாளில் 70,000 ஆயிரம் பவுண்டுகள் …

பிரித்தானியாவில் நேற்றைய தினம்(28) ஞாயிறு அன்று கடும் வெப்பம் காணப்பட்டது. இதனை அடுத்து பல நூறு பேர் கடல்கரைகள் நோக்கிப் படை எடுத்துள்ளார்கள். பிரித்தானியாவில் கடுமையான லாக் டவுன் தற்போது நிலவி வரும் நிலையில் கூட இவர்கள் அதனை பொருட்படுத்தாமல் கடல் கரைக்கு சென்றுள்ளார்கள். இதனை அறிந்த பொலிசார் பல கடல் கரைக்கு சென்று அங்கே கார்களில் இருந்த நபர்களை ஒருவர் ஒருவராக வழி மறித்து 200 பவுண்டுகளுக்கான தண்டப் பண டிக்கெட்டை கொடுத்துள்ளார்கள்.

நேற்று மட்டும் ஒரே நாளில் முழு பிரித்தானியாவில் சுமார் 70,000 ஆயிரம் பவுண்டுகள் பெறுமதியான தண்டப் பண டிக்கெட்டுகள் பொலிசாரால் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.